Share this book with your friends

William Goudie (Tamil) ஈக்காடிற்கு வந்த மெய்யான திருத்தூதர்

Author Name: தானியல் மோகன்ராஜ். வெ | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

அருட்பணி. வில்லியம் கௌடி, 21ஆம் நூற்றாண்டின் இளைய தலைமுறைக்கு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு மிஷனரியாக வந்த ஒரு ஸ்காட்லாந்து இளைஞனின் வாழ்க்கை வரலாற்றை, புகைப்பட வரலாற்று புத்தகமாக (Photo biography) படைப்பதில் பெரும் மகிழ்ச்சி, இந்த இளைஞனுக்கும் தமிழகத்தில் இருக்கும் தலித் மக்களுக்குமான உறவு, ஒரு தகப்பன் பிள்ளைக்குமான உறவிலும் மேலானது. உயர்குல மக்களால் அடிமைப்பட்டு கிடந்த ஆயிரக்கணக்கான தலித் மக்களுக்கு வாழ்வளித்து அவர்களின் எதிர்கால தலைமுறையினரை தலைநிமிரும்படி செய்தவர் கௌடி. அவரது வாழ்க்கை வரலாறு இன்றய இளைய தலைமுறைக்கு படிப்பினையாகவும், நமது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானதாய் இருக்கிறது. உண்மையான பிரார்த்தனைக்கு கடவுளிடமிருந்து நிச்சயம் பதில் உண்டு. 1848இல் ஒரு வெஸ்லியன் மெத்தடிஸ்ட் மிஷனரி திருவள்ளூருக்கு பயணம் மேற்கொண்டு அவ்வூர் மக்களை கண்டார். அவர்களோ விக்கிரக வழிபாட்டில் திளைத்திருக்கிறதை கண்டு மனதில் துயருற்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தார், அதுமட்டுமின்றி அந்நாட்களில் வெளிவந்த வெஸ்லியன் மாத இதழில், வாசகர்களை பிரார்த்தனை செய்யும்படி கீழ்கண்ட செய்தியுடன் கேட்டுக் கொண்டார், "ஆகையால் அவ்வூர் மக்கள் கடவுளை அறிந்து கொண்டு சீக்கிரமாய் இரட்சிப்படையவும் அம்மக்களுக்கு கடவுளின் சுவிசேஷத்தை சீக்கிரமாய் கொண்டு செல்லவும் கர்த்தராகிய இயேசு கிருஸ்துவினிடம் ஜெபம் பண்ணுங்கள்." அவர் ஜெபித்த ஒருசில ஆண்டுகளிலேயே கடவுளிடமிருந்து பதில் கிடைத்தது, அருட்பணி. வில்லியம் கௌடியின் மூலமாக மிகப்பெரிய மிஷனரி பணித்தளம் திருவள்ளூரில் உருவானது.

Read More...
Paperback
Paperback 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

தானியல் மோகன்ராஜ். வெ

திரு. தானியேல் மோகன்ராஜ் ஒரு கணினி நிபுணர் ஆவார். இந்தியா, இங்கிலாந்து, மலேசியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலுள்ள பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்தார். அவர் அறிவியல் இளங்கலை (வேதியியல்) படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், அறிவியல் முதுகலை (ஐ.டி) படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் படித்தார். அவரது பள்ளி நாட்களில் பொழுதுபோக்காக பழைய நாணயங்கள் மற்றும் தபால்தலை சேமிக்கும் பழக்கம் வரலாற்றின் மகத்துவத்தைப் பற்றி சிந்திக்கச் செய்தது. அந்த பொழுதுபோக்கு, வரலாற்று ஆராய்ச்சி செய்ய அவரை தூண்டியது, அவ்வராய்ச்சி தன்னுடைய சொந்த ஊரிலேயே ஆரம்பித்தது, அவ்வராய்ச்சியின் விளைவே இப்புத்தகம். சலிப்பான ஐ.டி ஊழியர் மகிழ்ச்சியான எழுத்தாளர் ஆனார். அவருக்கு மிஷனரி வரலாறு, இசை மற்றும் தகவல் தொடர்பு துறைகளைப் பற்றி அதிக ஆர்வம் உண்டு. இவர் அருட்பணி. வில்லியம் கௌடியால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், அது ஒரு இங்கிலாந்துக்காரர் தனது பகுதிக்கு வந்ததினால் அல்ல. மாறாக அந்த இங்கிலாந்துக்காரர் தன்னுடைய இளம் வயதில் அர்ப்பணிப்புடன் வெளிநாட்டு மண்ணில் மிஷனரியாக பணிசெய்ய வந்தவர். எனவே அவரது முதல் புத்தகம் அருட்பணி. வில்லியம் கௌடிக்காக. 2011இல், லண்டன் பல்கலைக்கழகத்திலுள்ள SOAS துறையுடன் வில்லியம் கௌடியின் மிஷனரி பணியை குறித்ததான ஒரு திட்டத்தை (Project) தானியேல் மேற்கொண்டார், அது இந்தியாவில் குறிப்பாக ஈக்காடு பகுதியில் கௌடியின் மிஷனரி மற்றும் சமுதாய பணிகள் மீதான ஆராய்ச்சி ஆகும். தானியேல் தனது சபையில் இளைஞர் சங்க தலைவர் ஆவார்; ஞாயிறுபள்ளி ஆசிரியராகவும், பின்பு VBS இயக்குனராகவும், சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் 15 ஆண்டுகளாக தென்னிந்திய திருச்சபையில் சுவிசேஷத்தை கற்பித்துவருகிறார். அவர் ஒரு நாடக இயக்குனர், நாடக வசன எழுத்தாளர், இசைக்கலைஞர் மற்றும் இணையதள மேம்பாட்டாளர் ஆவார். மேலும் இளந்தளிர் மற்றும் வாலிபர்களுக்கு தங்கள் எதிர்கால படிப்பு மற்றும் பணிக்குறித்த ஆலோசனைகளை தந்து, இறைபயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களை ஊக்குவித்துவருகிறார்.

Read More...

Achievements

+5 more
View All