Share this book with your friends

Zen oonjal / ஜென்ஊஞ்சல் Tamil zen Poems

Author Name: P.mathiyalagan | Format: Paperback | Genre : Poetry | Other Details

மரணமே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. நாளையைப் பற்றி நம்மால் முடிவு செய்ய முடியாது. வாழ்க்கை விடுகதைக்கு விடை தேடத்தான் நாம் இங்கு பிறந்திருக்கிறோம். இயற்கை நம் இருப்பை ஏற்றுக்கொள்ளும்வரை தான் நாம் இங்கு வாழ முடியும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறாத வேத நூல்களே இல்லை. வாழ்க்கை கடலில் ஜென் எனும் பாய்மரத்தை விரித்து கரையை அடைந்துவிடலாம். உலகமெனும் சேற்றிலிருந்து ஜென் நீர்ப்பூவாக உயர்ந்து நிற்கிறது. ஜென் மரணத்தை மையப்படுத்துகிறது. மரணத்தைப் பற்றிய சிந்தனையே நமக்கு ஞானத்தை வழங்குகிறது. பகலும் இரவும் ஒரே மாதிரியாக கடந்து செல்கிறது. நடக்கும் செயல்கள் வெவ்வேறாக இருக்கிறது. பூமி எனும் சிக்கலான இயந்திரத்திலிருந்து ஜென் விடுதலை தருகிறது. புத்தர் முயற்சியைக் கைவிட்டதும் ஞானம் அடைந்ததைப் போல. வானத்திலிருந்து மழைத்துளி பூமியை வந்தடையும் நேரம் கூட ஆகாது நீ ஞானமடைய என்கிறது. ஜென் மரணத்தை வாழ்க்கையின் ஒருபகுதி என்கிறது. ஜென் வாழ்வை நாம் கொண்டாடுவது போல மரணத்தையும் கொண்டாட வேண்டும் என்கிறது. புல், பூண்டுகள் வாழ்வின் மகத்துவம் அறியாதவை. உலகில் பிரவேசிக்கும் மனிதன் தனக்கு அடுத்து வரும் சந்ததியினர் தம்மைப் பற்றி பேசுமளவுக்கு காரியம் செய்திருக்க வேண்டும். இல்லையேல் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கும் அவனுக்கும எந்த வித்தியாசம் இல்லை.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப.மதியழகன்

ப.மதியழகன்(28.3.1980)

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ,உன்னதம், பதாகை, வாசகசாலை ஆகிய இணைய இதழ்களிலும், படைப்பு, காற்றுவெளி ஆகிய மின்னிதழ்களிலும் நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.

முதல் கவிதை தொகுப்பு தொலைந்து போன நிழலைத் தேடி 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு சதுரங்கம் 2011ல் வெளிவந்தது. மூன்றாவது கவிதை தொகுப்பு புள்ளிகள் நிறைந்த வானம் 2017ல் வெளிவந்தது. நான்காவதாக கட்டுரைகளும்,கவிதைகளுமாக துயர்மிகுவரிகள் 2017ல் வெளிவந்தது.2019ஆம் ஆண்டு சாத்தானின் வேதம் என்ற கவிதை தொகுப்பும் நந்தி என்ற சிறுகதை தொகுப்பும் 2020ல் மைஇருட்டு என்ற கவிதை தொகுப்பும் தும்பி என்ற ஹைக்கூ தொகுப்பும்  வெளிவந்திருக்கிறது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது. சிறுகதைகள்.காம்ல் இவரது சிறுகதைகள் படிக்கக் கிடைக்கும்.

தற்போது மன்னார்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Read More...

Achievements