கவியின் வியர்வை என்னும் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில், சமூக சிந்தனைகளை தூண்டும் அடிப்படையில் பல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து அளிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் என்னை பாதித்த என் கண்கள் படம் பிடித்துக் கொண்ட நிகழ்வுகளை நான் என் பேனாவின் வியர்வையாக காகிதத்தில் படித்திருக்கிறேன் அதனையே கவியின் வியர்வை என்று தலைப்பிட்டு உங்களுக்கு படைத்து அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் ஒவ்வொரு கவிதைகளும் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு கவிதைகளையும் நீங்கள் கடந்து போகும் பொழுது உங்களுக்கு காட்சிகளோடு கூடிய ஒரு பயணத்தை நிச்சயம் உங்களுக்கு வெளிப்படுத்தும். கொடைக்கானல் மலையில் தொடங்கிய என்னுடைய பயணமானது சென்னை லயோலா கல்லூரியில் வந்தடைந்த பொழுது பல கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு வகுப்புகளை தொடங்கினேன். என் கல்லூரி எனக்கு பல அனுபவங்களை கற்று தந்ததோடு மட்டுமல்லாமல், என் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் என் கனவுகளை மெய்ப்பித்துக் கொள்ளவும் எனக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது அதனையும் இந்த கவிதைத் தொகுப்பில் நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். இப்படிக்கு உங்கள் கி . அரி முருகன்