தேடத் தேட தொலைகிறாய் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பை எழுதிய இளங்கோ. அக்ஷய் பாலாஜி நான்தான். சென்னையில் பிறந்து வளர்ந்தேன் இப்பொழுது ஏ எம் ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை ஊடகவியல் படித்துக்கொண்டிருக்கிறேன். என் பெற்றோர் என் சகோதரி என் ஆசிரியர்கள் என் அன்புக்குரிய இயக்குனர் இமாலயன் இவர்கள் அனைவரும் தந்த ஊக்கத்தாலும் உற்சாகத்தையும் இந்த சிறுகதைத் தொகுப்பை படித்து உங்கள் முன் அளிக்கிறேன். என் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள சந்தோஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் நிறைவு செய்தேன். பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கின்ற பொழுது வணிகவியல் பிரிவில் சேர்ந்து படித்தேன். ஊடகவியல் மீது கொண்டுள்ள தீராத காதலும் சினிமா திரைப்படங்களை இயக்குவதில் எனக்கு உள்ள மிகப்பெரிய ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ள இந்தப் பாடத்தை தேர்வு செய்து படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு பெரிதும் உதவிய எங்கள் தயாரிப்பு நிறுவனம் எங்கள் குடும்பம் என் அண்ணன் ராஜ் பிரகாஷ் எனக்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர்கள் பேராசிரியர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்