குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டவை இக்கதைகள். காதல், பிரிவு, தோல்வி, ஏக்கம் இவைகளால் பாதிப்படையாத மனிதனே இல்லை. ஒரு சதவீத இன்பத்துக்காக தொண்ணூற்று ஒன்பது சதவீத துயரங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வாழ்க்கையின் நெருக்குதல்கள் மனிதனை நிம்மதியாக உறங்க விடுவதில்லை. தோன்றும் கனவுகள் கூட அனாதையாகத்தான் அவனை அலையவைக்கின்றன. அவனுக்கான வாழ்க்கையை யாரோ நிர்ணயிப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் உதைபடும் பந்தாய் அவனை இங்குமங்குமாய் அலைக்கழிக்கி
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து