Share this book with your friends

Paandiyammai / பாண்டியம்மை 2022

Author Name: Nandhini Sugumaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பாண்டியம்மை..

எனது முதல் குறுநாவல் முயற்சி. நம் மக்களில் குலதெய்வ வழிபாடு என்ற ஒரு முறை உண்டு. தலைமுறை தலைமுறையாய் அதைத் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த குலதெய்வங்கள், பொதுவான தெய்வத்தின் பெயரைக் கொண்டதாய் அல்லாது, சில தனித்துவமான பெயராகவும் அதுவும் நம்மிடையே வாழ்வோர் அல்லது நமக்கு முந்தைய தலைமுறையில் வாழ்ந்தோரின் பெயராகவோ இருக்கும்.

அத்தெய்வத்தைப் பற்றிய கதையைக் கேட்டால், உண்மையாய் வாழ்ந்தவரையே மக்கள் கடவுளாக வழிபட்டு வந்திருப்பதை அறியலாம்.

அப்படியான கதைதான் இது. பாண்டியம்மா என்றொரு பெண்மணி, தனது அடுத்த தலைமுறைக்கு எப்படி தெய்வமாக மாறுகிறார் என்பதே இந்நாவல்.

தங்களின் ஆதரவையும் கருத்தையும் எதிர்நோக்கி..

நந்தினி சுகுமாரன்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

நந்தினி சுகுமாரன்

வணக்கம் வாசக தோழமைகளே..

நான் நந்தினி சுகுமாரன். இது எனது புனைப்பெயர். நந்தினி என்ற பெயரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அதனோடு எனது தந்தையின் பெயரை இணைத்து, புனைப்பெயரில் எழுதி வருகிறேன்.

நேரம் கடத்துவதற்காக வாசிக்க துவங்கி, பின் அதுவே என் முழுநேர சுவாசமாகிப் போனது. வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளரத் துவங்கின. நான்காண்டுகள் வாசகியாக மட்டுமே இருந்த நான், 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் எனது எழுத்துப் பயணத்தைத் துவக்கினேன். இதுவரை 2 குறுநாவல், 15 முழுநாவல்கள், சில சிறுகதைகள் எழுதியுள்ளேன்.

நோஷன் பிரஸ் என்ற இணையதள வெளியீட்டின் மூலம் எனது சொந்த முயற்சியில் 10 நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. AD பதிப்பகத்தின் மூலமாக ரகசியமாய் சுவாசிக்கிறேன் உனையே நாவல் வெளிவந்துள்ளது. 

முகநூல் வாசகர்களுக்கும் சற்று அறிமுகமான நபர்தான்.

'நந்தினி சுகுமாரன்' என்ற பெயரைப் பின்தொடர்ந்து, எனது தொடர்கதைகளை வாசிக்கலாம். வாசகர்கள் தரும் கருத்துக்களே மிகப்பெரும் அங்கீகாரம் எழுத்தாளருக்கு.

nandhinisugumarannovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எனது எழுத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள்..

நந்தினி சுகுமாரன்.

Read More...

Achievements

+6 more
View All