Share this book with your friends

Enkindling the Endorphins of Endurance / மாரத்தான் Your Ultimate Go - To Guide for Running Your First 5K, 10K, Half and Full Marathon / உங்கள் முதல் 5k, 10k, அரை மற்றும் முழு மாரத்தான் ஓட்டத்திற்கான வழிகாட்டி

Author Name: Dr. K. Jayanth Murali | Format: Hardcover | Genre : Sports & Games | Other Details

பூமியில்‌, மனிதர்கள் தான்‌ சிறந்த ஓட்டக்காரர்கள்‌. நாம்‌ நீண்டதூரங்களுக்கு ஓடியே பரிணாமம்‌ அடைந்துள்ளோம்‌ என்கிறது அறிவியல்‌. இதில் முன்னேறுவதற்கு பதிலாக வாழ்க்கை முறை நோய்கள்‌, மனச்சோர்வு, பதட்டம்‌ ஆகியவற்றால்‌ நாம்‌ உட்கார்ந்தே இருக்கின்ற நாகரீகமானது வருத்ததிற்குடையது. எண்டோர்‌பின்களிலிருந்து அதனுடைய இயற்கையான உற்சாகத்தை மீட்டெடுப்பதை மறந்துவிட்டு நாம்‌ துரதிஷ்டவசமாக ஆல்கஹால்‌ மற்றும்‌ போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு தலைமுறையாகிவிட்டோம்‌. 42 Mondays புத்தகத்தின்‌ ஆசிரியரான டாக்டர்‌ கே.ஜெயந்த்‌ முரளி, “Enkindling the Endorphins of Endurance” புத்தகத்தில்‌ நீண்ட தூர ஓட்டத்தால் எண்டோர்பின்களைத்‌ தூண்டுவதன்‌ மூலம்‌ தன்னுடைய வாசகர்களின்‌  ஆரோக்கியம் மற்றும்‌ உற்சாகத்தை மீண்டும்‌ உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்.

இந்த விரிவான வழிகாட்டியில்‌ சிறந்த பயிற்சித் திட்டங்கள்‌, நீண்டதூர ஓட்டங்கள்‌, ஊட்டச்சத்து/நீரேற்ற உத்திகள்‌, நீண்ட ஒட்டம்‌ குறித்த அனைத்தும் முழவதுமாக விவரிக்கப்பட்டுள்ளது . இந்த நம்பமுடியாத வியர்வைப்‌ பயணத்தில்‌ பதிவுசெய்துகொண்டு களத்தில்‌ இறங்கிடுங்கள்‌. 5k, 10k, அரை அல்லது முழு மாரத்தானின்‌ தொடக்கக்‌ கோட்டிற்கு நீங்கள்‌ முன்பை விட உங்கள்‌ உடலையும்‌, மனதையும்‌ மேம்படுத்துவதன்‌ மூலம்‌, நீங்களே உங்களைக்‌ கண்டு வியப்பதற்கு தயாராகிடுங்கள்‌. நீங்கள்‌ பயணத்தின்‌ எந்தக்‌ கட்டத்தில்‌ இருந்தாலும்‌, இந்தப்‌ புத்தகம்‌ உங்கள்‌ பயிற்சியை சரியான பாதையில்  அமைத்துக்கொள்ள உதவும்‌. இது உங்களை மாயாஜாலமாக தொடக்கக்‌ கோட்டிலிருந்து, இறுதிக் கோட்டிற்கு அழைத்துச்‌ செல்வதை நீங்களே பார்ப்பீர்கள்‌. மிகவும்‌ எளிமையான, முற்றிலும்‌ உத்வேகம்‌ தரக்கூடிய இந்தப்‌ புத்தகம்‌ உங்களுக்குள்‌ புதைந்துகிடக்கும்‌ துணிச்சல்‌ மற்றும்‌ வலிமையை வெளிக்கொணரச்‌ செய்வதுடன்‌ மாரத்தான்‌ எனப்படும்‌ அற்புத பயணத்தின்‌ இறுதிக்கோட்டைக்‌ கடக்க உங்களை உந்திச் செல்லும்‌.

Read More...
Hardcover
Hardcover 795

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாக்டர். கே. ஜெயந்த் முரளி

டாக்டர்‌.கே.ஜெயந்த்‌ முரளி, தன்னுடைய நாட்டிற்காக 30 வருடங்களுக்கும்‌ மேலாக சேவைபுரிந்துள்ள ஓர்‌ ஐபிஎஸ்‌ அதிகாரி என்பதுடன்‌ தமிழ்நாடு காவல்துறையின்‌ தலைமை இயக்குனராக உள்ளார்‌. தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையை ஹைதராபாதில்‌ செலவிட்ட அவர்‌ பின்னர்‌ டெல்லிக்கு சென்று நுண்ணுயிரியலில்‌ முனைவர்‌ பட்டம்‌ பெற்றார்‌. 1991 ஆம்‌ ஆண்டில்‌ இந்திய காவல்துறை சேவையில்‌ சேர்ந்த அவர்‌ சென்னைக்கு பணிமாறுதல்‌ பெற்றார்‌.

அவர்‌ பல முக்கியமான மற்றும்‌ தனிச்சிறப்புவாய்ந்த பணிகளையும்‌ கையாண்டிருக்கிறார்‌. அவை அவருக்கு 2010 மற்றும்‌ 2015 இல்‌ குடியரசுத்‌ தலைவர்‌ காவல்துறை விருது, 2017 இல்‌ அரசு சேவையில்‌ சிறப்பாக பணியாற்றியமைக்கான முதலமைச்சர்‌ விருது மற்றும்‌ 2019 இல்‌ முதலமைச்சரின்‌ சிறப்புச்‌ சேவை விருது ஆகியவற்றைப்‌ பெற்றுத்‌ தந்திருக்கின்றன.

மேலும்‌, மாரத்தான்களில்‌ ஓடுவதில்‌ பேரார்வம்‌ கொண்டவர்‌. இதில்‌ இரண்டு சாதனைகளை நிகழ்த்தி சாதனைகளுக்கான ஆசிய  புத்தகத்தில்‌ இடம்பெற்றுள்ளார்‌, அதில்‌ ஒன்று 2018 இல்‌ அரை மாரத்தான்‌ பிரிவில்‌ வருவது, மற்றொன்று 2019 ஆம்‌ ஆண்டின்‌ முழு மாரத்தான்‌ பிரிவில்‌ வருவதாகும்‌. அவர்‌ பெருவிருப்பமுள்ள வாசகர்‌, பிளாக்‌ எழுதுபவர்‌, விவசாயி மற்றும்‌ ஓட்டம்‌, ஊட்டச்சத்திற்கான பயிற்சியாளரும்‌ ஆவார்‌. சமைப்பது அல்லது ஓவியம்‌ தீட்டுவதில்‌ நேரத்தை செலவிடுவதை விரும்புகிறவர்‌.

Read More...

Achievements

+10 more
View All