Share this book with your friends

Kampan was surprised and sweaty / வியந்தான் வியர்த்தான் கம்பன்

Author Name: Kavinjar R Aranganathan | Format: Paperback | Genre : Young Adult Nonfiction | Other Details

இந்த வரிகள் என் இதயத்தின் உணர்வுகள் ஏற்படுத்திய இன்ப வலிகளின் வடுக்கள். அந்த வடுக்களினுள்  நீறுபூத்த நெருப்பாய் கிடந்ததை தன் பேரழகு விசிறியால் வீசி ஊழித் தியாக்கி உலவிட்டவள் ஒரு பேரழகு தேவதை. அவளை மட்டும் நான் கண்ணுறாதிருந்தால் இத்தனை வீச்சுக்களோடு. என் கனவுக்கன்னி கவிதைச் சலங்கையிட்டு விண்ணுலகம் வரை விரவி நடனமாடியிருக்க மாட்டாள். அவளை சில முறை மட்டுமே நான் கண்டேனாயினும், அழியா ஓவியமாய் அலங்கார நர்த்தகியாய் என் இதய மாளிகையில் எக்கணமும் நடமிட்டுக் கொண்டே இருக்கிறாள். அந்நடனம் என் எப்பிறப்பிலும் தொடரும் தொடர வைப்பேன். அவளை நான் உயிர்ப்போடு இதயத்தில் இருந்து கரங்களில் இறக்கி எழுதுகோலின் வழியே உலவ விட்ட உன்னதம் தான் இந்த புத்தகத்தின் கவிதை வரிகள்.

     அவள் உயிரியல் ரீதியாக யாருக்கும் சொந்தமாயிருக்கலாம். ஆனால் கனவு நாயகியாக என் கற்பனைக்கே சொந்தம். அவளுக்கு நான் நன்றிகள் நவில மாட்டேன். ஏனெனில் என் கனவுகளோடு கலந்து எனக்குள்ளான இனியவளுக்கு நான் எப்படி நன்றி சொல்ல.....

     

இருப்பினும் இல்லாத நன்றிகளை சொல்லாமல் சொல்கிறேன்.

Read More...
Paperback
Paperback 170

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் இர அரங்கநாதன்

திருவண்ணாமலை -செங்கம் வட்டம் கண்ணக்குருக்கை  கிராமத்தைச் சேர்ந்த கவிஞர்.இரா,அரங்கநாதன்  விவசாயி- பத்தாவது வகுப்பு வரை படித்தவர். தன் சொந்த ஆர்வத்தால்-சுய முயற்சியால் இலக்கணம் கற்று அனைத்து  வகை மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றலைக் கொண்டவர்.இவரின் துணைவியார் திருமதி.அர.சாமுண்டீஸ்வரி. இவரின் வாரிசுகள் அர. பிரியதர்ஷனி- மருத்துவர் அர.பிரேமலதா- மென்பொறியாளர் அர.பாரதி-செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளர் ஏராளமான பாடல்களை எழுதி உள்ள இவர் இப்போதுதான் படைப்புகளைப் புத்தகமாக வெளியிடுகிறார்.


 இவரின் அருணாச்சலாமும் அருமை நாயன்மார்களும் மற்றும் வியந்தான் வியர்த்தான் கம்பன்-இரண்டுமே இன்சுவை படைப்புகள் இவைகளில் உள்ள பாடல்களும்,  கவிதைகளும் சாகாவரம் பெற்று நிலைக்க்க்கூடியவை. சங்க காலக் கவிதைகளுக்கு  ஒப்பானவை -சிறப்பானவை ஆழ்ந்த புலமையும் கவித்திறனும் கொண்ட இவரின்  கவியாற்றல்  வியக்கவைக்கிறது. ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல்.

Read More...

Achievements