Share this book with your friends

Kolangalin Yutham / கோளங்களின் யுத்தம் Melagam (Crust), Naduvagam (Mantle), matrum Ullagam (Core) / மேலகம், நடுவகம் மற்றும் உள்ளகம்

Author Name: Melita Tessy | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

திடீரென்று நீங்கள் பூமியில் உள்ளே இழுக்கப்பட்டு மறைந்துவிட்டால், என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?  அங்கே, ஒரு புதிய இன மக்கள் உங்களை பயன்படுத்தி, மனித குலத்தை அழிப்பதற்காக சதி செய்தால்...?  விடாமல் துரத்தும் விந்தையான அனுபவங்களும், விவேகம் கோரும் மாபெரும் முடிவுகளும் உங்களை சூழ்ந்து நெருக்கினால்...? 

என்ன செய்வீர்கள்? எப்படி யோசிப்பீர்கள்? எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? 

இந்த கதையின் நாயகர்களான ஜேஸ்லின், க்ரூமன் இளவரசர் ரெஃபின், மேண்ட்டிலேனிய இளவரசி ஆல்தியா ஆகிய மூவரும், சிக்கலான சூழல்களை எதிர்கொண்டு, துணிவோடு நின்று போராடுவதை தேர்வு செய்கிறார்கள்.

"நான் பொய்யாக வாழ முடியாது; என் வாழ்க்கையை விட்டு ஓட முடியாது" என்ற தாரக மந்திரம் அவர்களுக்கு பலன் தருமா? 

பூமியில் மாற்ற வேண்டியதை மாற்றவும், காக்க வேண்டியதை காக்கவும், அழிய வேண்டியதை அழிக்கவும் அவர்களால் முடியுமா?  

அவர்களது சாதனைகள் வீணாகிப் போகுமா? அல்லது, அழியாக் கதைகளாக புகழ் பெறுமா? 

தெரிந்துகொள்ள, உடனே வாங்கி படியுங்கள். வியப்பூட்டும் அவர்களின் கதையை படித்து, விவாதித்து, பகிர்ந்து மகிழ, உங்களை அழைக்கிறது, “கோளங்களின் யுத்தம்“. 

Read More...
Paperback
Paperback 349

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மெலிடா டெசி

மெலிடா டெசி தன் பள்ளி பருவத்தில் இளம் வாசகர்களுக்காக எழுதிய "BATTLE OF THE SPHERES” என்ற ஆங்கில நாவலின் தமிழ் பதிப்பு இந்நாவல். திரு பெஞ்சமின் அவர்கள்  தமிழ் புத்தகப் பிரியர்களுக்காக, மிகுந்த ஆர்வத்தோடு இந்த தமிழாக்கத்தை படைத்துள்ளார். அவர் நிறைய கவிதைகள், கட்டுரைகள், ஆன்மீக சிறு நூல்கள் எழுதியிருந்தாலும் இந்த மொழிபெயர்ப்பு தான் இவரின் பெரிய முயற்சி. 

கற்பனையை மிஞ்சிய சாகசங்களை விரும்பும் அனைத்து இதயங்களுக்கும் இந்நூல் அர்ப்பணம். "உங்கள் துன்பங்களை விட நீங்கள் வலிமையானவர்; எந்த வயதிலும் சாதனை படைக்கக் கூடியவர்" என்று பறைசாற்றும் கதை இது.

Read More...

Achievements

+10 more
View All