Share this book with your friends

Maga Manal Samuthiram / மகா மணல் சமுத்திரம்

Author Name: Swamidhason Francis | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தனி மனித அனுபவ உணர்வுகளிலிருந்தே நல்ல எழுத்து தோன்றுகிறது. லிபிய நாட்டு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர். சுவாமிதாசன் பிரான்சிஸ், மகா மணல் சமுத்திரம் என்ற இந்த புதினம் விவரிக்கும் சம்பவங்களின் நேரடி சாட்சி. எனவே, அவரது லிபிய வாழ்வின் அனுபவ வெளிச்சத்தில் ஆழமான மன வேதனையோடு இந்தப் புதினம் எழுதப் பட்டுள்ளது. நம்பிக்கை, ஆசை, அச்சம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்ற அத்தனை மனித உணர்வுப் பரிமாணங்களின் அழகான ஒரு கலவையாக இந்தப் புதினம் அமைந்திருக்கிறது. புத்தகத்தின் இறுதியில், இந்தியாவில் இருந்து மறுபடியும் லிபிய பல்கலைக் கழகத்தில் வேலையில் சேர வரும் பேராசிரியராக நாவலாசிரியரே தோன்றுகிறார்.

பொதுவாக, ஒரு சிறிய நாவல் இதைப் போல ஆழமான தாக்கத்தை, வாசகன் மனதில் ஏற்படுத்துவதில்லை. யதார்த்தம் என்னவென்றால், ஒருபக்கம் கூட விடுபட்டு விடாமல் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை நான் வாசித்து முடித்தேன். தொடங்கிய பிறகு முடிவு வரை நிற்காத விறுவிறுப்பான வாசிப்புப் பயணம் அது. நிச்சயமாக, மகா மணல் சமுத்திரம் ஒவ்வொரு வாசகனையும் வசீகரிக்கும். நீங்களும் வாசித்துப் பயன் பெற இதய பூர்வமாகப் பரிந்துரைக்கிறேன்.

- பேராசிரியர்.எம்.செபஸ்தியான்

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுவாமிதாசன் பிரான்சிஸ்

சுவாமிதாசன் பிரான்சிஸ்

இவர் குமரிமாவட்டம் நாகர்கோவிலில் 1956ல் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ, எம்.ஃபில் பட்டமும், விவிலிய விரிவுரையில் முனைவர் பட்டமும் பெற்றவர். 2006 முதல் 2015 வரை லிபியா நாட்டின் கூம்ஸ் நகர அல் மர்ஹஃப் யூனிவர்சிட்டியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ‘மணல் சமுத்திரம்’ இவரது எழுத்தில் வெளியாகும் எட்டாவது புத்தகம்; தமிழில் இவரது முதல்  வரலாற்றுப் புதினம். 

ஆசிரியரின் பிற நூல்கள்

1.   THE IAGO TRIAL – Novel

2.   THE BETRAYED DISCIPLE – Drama

3.   THE IMPERIAL INQUEST- Drama

4.   UNSHACKLING AN APOSTLE [Judas Iscariot in Christology]- Non Fiction

5.   INTRODUCING THE HOLY QURAN TO CHRISTIAN STUDENTS- Non Fiction

6.   வேதம் படித்த சாத்தான் – நாடகம்

7.   வஞ்சிக்கப்பட்ட சீடன் - நாடகம்

Read More...

Achievements

+1 more
View All