Share this book with your friends

Marabhu Muran / மரபு முரண்

Author Name: Mullanchery M. Velaian | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

கல்வி கிட்டாமல் ஓய்ந்து வாழ்ந்த மக்களின் உணர்வுகளும், சிந்தனையும், சமூக நடைமுறைகளையும் வரலாறுகள் முறையாக வழங்கப்படவில்லை. அதிலும் கற்பனைகளே மிஞ்சி நின்றன. மரபுகள் உடைகின்ற போது புது சிந்தனை பிறக்கிறது. கவிதைகளும் கட்டுரைகளும் நாவல்களும் புது சிந்தனையின் வடிவத்தில் “மரபு முரண்" களால் புதிய வடிவம் பெற்று வருகின்றன. வாசகர்கள் கவரும் வடிவங்கள் எல்லா படைப்புகளிலும் மேலோங்கி வருகின்றன. அது வருகின்ற காலங்களில் விமர்சிக்கப்பட்டு பின்னர் மரபாகிப் போகும்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் எழும் சிந்தனைகளை எழுத்தாக்கம் செய்யும்போது மரபுகளை மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் எழுத்து முடங்கிப் போக வாய்ப்புகள் உண்டு. எனது சிறுவயதில் மனதில் பதிந்த எண்ணங்களை எழுத்தாக்கம் செய்யும்போது ஒரு புது வித எழுத்து வடிவம் உருவாகியது. அதை எந்த வரையறைக்குள் கொண்டு வரலாம் என்பது அறிய முடியவில்லை. இதில் வரலாறு இருக்கிறது அறியப்படாத மக்களின் வாழ்வியல் அடங்கியிருக்கிறது கட்டுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம் சிறுகதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம் சமூகவியலாகவும் எடுத்துக் கொள்ளலாம். கலை இலக்கியம் அறிவியல் என மருவி நிற்கும் என் சிந்தனையின் புதிய படைப்பாகவே உணருகிறேன். படைத்துவிட்டேன், படித்துப் பாருங்கள்.
இந்த நூலில் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறாத உயிரோட்டமாக வாழ்ந்து மறைந்தவர்களின் சாதனைப் பதிவுகளும் இடம் பெற்றுள்ளது. இதுபோல் வாசிப்பவர்கள் பகுதிகளில், பல வரலாறுகள் உயிரோட்டமாக வாழ்ந்து மடிந்திருக்கலாம். அவைகளை நினைவுபடுத்தும் என நம்புகிறேன். சில புதினங்களாகவும், சிலகருத்துத் தொகுப்புகளாகவும், சில சம்பவங்கள் சிறுகதை வடிவத்திலிருந்தாலும் நாம் வாழ்வியல் சூழலில் பிரதிபலித்த நிகழ்வுகளே.

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முள்ளஞ்சேரி மு.வேலையன்

‘குமரி அறிவியல் பேரவை’யின் ஒருங்கிணைப்பாளர் திரு.முள்ளஞ்சேரி வேலையன், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் எழுச்சியூட்டும் பயிற்சிக் களங்கள், கல்விப் பயணங்கள் நடத்தி வருகிறார். ஒரு அறிவியல் ஆர்வலரிடம் உறைந்திருக்கும் அதிசயிக்கத்தக்க மனித நேயம் என்னை ஈர்த்தது. திரு.முள்ளஞ்சேரி வேலையன் அவர்கள் தொகுத்தளித்த மரபு முரண் என்னும் இவரது இந்த நான்காவது நூலினை முழுமையாகப் படித்த போது, இவர் தாம் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும், சந்தித்த நபர்களையும் பற்றியெல்லாம் சுவைபட, அவருக்கே உரிய நாஞ்சில் தமிழ்நடையில் விருந்து படைத்துள்ளார் என்பது மீண்டும் உறுதியாகிறது.

நெல்லை சு.முத்து, அறிவியல் எழுத்தாளர்

தான் வளர்ந்த மண்ணில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதோடு காலம் காலமாய் கலாச்சாரங்கள் மாறி வரினும் காலப்போக்கு தன்னை விட்டு விடாமல் தான் வாழ்ந்த மண்ணின் மரபுகளை தூக்கி நிறுத்தி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரில் முள்ளஞ்சேரி வேலையனும் ஒருவர்.  அறிவியல் நூல்கள், அறிஞர்கள் பற்றிய நூல்கள், அறிவியல் உணர்வூட்டும் நூல்கள் என பல வகையான நூல்களைப் படைத்து வந்த நூலாசிரியரின் 'பொற்றைக்காடு' என்ற பண்பாட்டு வரலாற்று நாவல் அன்னாரின் மனித நேசத்தை வெளிக்காட்டிய ஓர் அற்புத நூல். பொற்றைக்காடு வரிசையில் மண்ணின் மணத்தையும் நம் முன்னோர்களின் சொல் வளத்தையும் தாங்கி வரும் அற்புதப் படைப்பாக அமைந்திருக்கிறது 'மரபு முரண்'.

கவிஞர் குமரித்தோழன்

Read More...

Achievements

+5 more
View All