Share this book with your friends

SINDHANAI THULIGAL (2000) / சிந்தனைத் துளிகள் 2000

Author Name: Kundrakudi Adigalar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

“வானொலி புகழ்”
தென்கச்சி. கோ. சுவாமிநாதன்

“அந்த ஆள் ரொம்பவும் திறமைசாலி! இந்த ஆள் ரொம்பவும் சாமர்த்தியசாலி!” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இரண்டு பேர்களுக்கும் என்ன வித்தியாசம்?இப்படி ஒரு கேள்வியை உங்களைப் பார்த்து யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? “அவசரமா கொஞ்சம் வேலையிருக்கு... அப்புறமா வ்ந்து சொல்றேன்!” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நழுவத்தான் தோன்றும் நம்மில் பலருக்கு! சிந்தனைத் துளிகள் புத்தகம் நம் கையில் இருந்தால் நழுவவேண்டிய அவசியம் ஏற்படாது.“சாமர்த்தியமும், திறமையும் ஒன்றல்ல” என்கிறார் தவத்திரு அடிகளார்.
“சாமர்த்தியம், எப்படியும் காரியத்தை சாதிப்பது” திறமை முறைப்படி சாதிப்பது” என்பது அவர் விளக்கம். .
“நம்ம எதிரியோட பழகுகிறவன் நமக்கும் எதிரி!” என்பதுதான் நம்முடைய கண்ணோட்டம் என்கிறார். “எனக்கு நண்பராக இருந்தால் போதாது... எனது பகைவருக்கு விரோதியாகவும் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பது விரும்பத் தக்கதல்ல.”
இப்படி எத்தனையோ அருமையான கருத்துரைகள் அவற்றையெல்லாம் அழகான நூலாக்கித் தருகிறார்... தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அன்பிற்குரியவரான கவிஞர் கலைவாணி சீனி திருநாவுக்கரசு அவர்கள்.

402“பசிக்குச் சோறும் படுப்பதற்கு இடமும் அணைப்பதற்கு ஆயிழையும் கிடைத்தால் போதும் என்று முயற்சிப்பவர்கள் பிச்சைக்காரர்களே.”

403. “காலத்தையும் கடமையையும் இணைத்துப் பார்த்தால்தான் கடமைகளின் அளவும் தரமும் கூடும்.”

404. “வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள் ஒயாது ஒழியாது கடமைகள் செய்தாலும் போதா மனமே பெறுவர். சோம்பேறிகள் செய்த சில காரியங்களையே பெரிதாக்கி மனத் திருப்தியடைவர்.”

405. “பதவியைப் போல மனிதனைக் கெடுப்பது வேறு ஒன்றும் இல்லை,”

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி அடிகள் (சூலை 11, 1925 - ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். குன்றக்குடி ஆதீனத்தின் மடாதியாக இருந்தவர்.

Read More...

Achievements

+15 more
View All