Notion Press
Sign in to enhance your reading experience
You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Sign in to enhance your reading experience
Sign in to continue reading.
Join India's Largest Community of Writers & Readers
An Excellent and Dedicated Team with an established presence in the publishing industry.
Vivek SreedharAuthor of Ketchup & Curryபரந்தாமன் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தாய்மொழி தமிழை அளவு கடந்து நேசித்தவர். வாழ்நாள் முழுதும், எல்லா நேரமும், தமிழ் வளர்ச்சி பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள், காவியங்கள், பாடல்கள், பொதுமறைகள் போன்ற அனைத்து நூல்களையும் தன் வீட்டில் சேகரித்து வைத்து, அவைகளை அலசி ஆராய்ந்து படித்து, தன்னைப் போல் தமிழ்ப் பற்று கொண்ட அறிஞர்களுடன் பட்டிமன்றம், விவாதமென நடத்தி மகிழ்வார்.
பரந்தாமனின் ஒரே பெண் கனகா. கல்லூரியில் படித்த நிலையில், கனகாவுக்கு, ஆர்டா எனும் ஐரோப்பிய இளைஞனுடன் பரிச்சயம் ஏற்பட்டது, அதுவே அவர்களிடையே காதலாகப் பரிமளித்தது. ஆர்டா ஒர் அரச வம்சத்தில் வந்தவன். உலகப் போரில், அரசாண்ட அவனது மூதாதையரும், உறவினரும் பகைவரின் நெருக்கடியால், வேறு தேசங்களுக்குத் தப்பியோட நேர்ந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும், அந்த இன மக்களின் வாரிசுகள், தமது தாய் மண்ணைத் தேடும் முயற்சியில் வெற்றி பெறாமல் தவித்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இனத்து மத நூல்படி, ஆர்டா அந்த மண்ணின் மன்னனாக முடி சூட நாள் குறிக்கப்பட்டு, அவன் தன் காதலி கனகாவுடன், இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஆர்டா மண்ணின் அரச தம்பதியராகப் பதவி ஏற்றனர்.
மகள் ஒரு அந்நிய நாட்டு இளைஞனைக் காதலித்ததை முதலில் எதிர்த்த பரந்தாமன், தான் உடல் நலக்குறைவால் படுக்கையில் வீழ நேர்ந்ததால், மனம் மாறினார். கனகா தன்னுடைய காதலனுடன் வாழ்வில் இணையப் பச்சைக் கொடி காட்டிய பரந்தாமன், தனது வாழ்நாளுக்குப் பிறகு, தான் நேசித்துப் பாதுகாத்த அத்தனை தமிழ் நூல்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை, மகளிடம் தந்தபின், கண் மூடினார்.
கனகாவுக்குத் தந்தை மூலம் சீதனமாக வந்த தமிழ், அவளது அயல்நாட்டு கணவனின் நூற்று இருபது ஆண்டு மண் மீட்பு லட்சியம் வெற்றி பெற எவ்வாறு உதவியது என்பதே மீதிக் கதை.
நித்யா
ஓர் பிரபல நிறுவனத்தில் ஐம்பது ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். சென்னையில்,வசிக்கும் இவரின் தாய் மொழி தமிழ். ஆங்கில, தமிழ் நூல்களை விரும்பிப் படிப்பவர். இவரது இரு தமிழ்ப் புதினங்கள் அச்சில் வெளிவந்துள்ளன. இவரது மூன்று தமிழ் நாடகங்கள், மேடையில் அறங்கேறியுள்ளன. இணையத்திலும் இவரது புதினமும், நாடகமும் வெளிவந்துள்ளன. இது தவிர, இவர் சில ரேடியோ நாடகங்களையும் எழுதியுள்ளார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.