Share this book with your friends

Thirukkural Neri Nindra Sandrorgal / திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள் சான்றோர்களின் வாழ்வில் வள்ளுவம்

Author Name: S. Kalaivanan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள்' என்ற இந்த நூலில், இந்திய அளவில் மட்டும் அல்லாது உலகளாவிய அளவிலும் சான்றாண்மையுடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள், பண்டைய மன்னர்கள், அறிவியலாளர்கள், தேசத்தலைவர்கள், சமுதாயப் பற்றாளர்கள்  இவர்களின் வரலாறு, வாழ்க்கைமுறை, அவர்கள் வாழ்வில் கடைப்பிடித்த வாழ்வியல் தத்துவங்கள்,  நெருக்கடியான நேரங்களில்அவர்கள் கையாண்ட யுக்திகள் வள்ளுவத்தின் மூலமாக விவரிக்கப்பட்டுள்ளது. 

பேராண்மை மிக்க தலைவர்களின் மாட்சிமைகள் மட்டுமன்றி நயவஞ்சகர்கள் மற்றும் கொடுங்கோலர்களின் கயமைத்தன்மையையும் அவரவர் செயலுக்குப் பொருந்திய குறள்களின் வாயிலாக இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சமுதாயத்தில்  கணிப்பொறியையும், கைப்பேசியையும் லாவகமாக 
இயக்கத் தெறிந்த இளைஞர்களுக்கு வள்ளுவம் காட்டும் சான்றாண்மைக்குரிய 
உயரிய குணங்களான அன்பு, நாணுடைமை,கருணை, ஈகை, வாய்மை ஆகிய  பண்புகளை  வாழ்க்கையில் நெறிப்படுத்த  தெரியவில்லை.

இந்த நூல் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல சிந்தனையுடனும் சமுதாயத்தின் மேல் அக்கறையுடனும் நேர்மையுடனும் வாழ வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

பண்டைய காலத்தில் அறிஞர்களும் சான்றோர்களும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்த  செயற்கரிய செயல்களை அறிந்து,  அதை குழந்தைகளுக்கு நீதிக்கதையாக போதிக்க முனைபவர்களுக்கும் ,   முக்கியமாக சான்றோர்களாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு கையேடாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அறிவியலாலும் தொழில் நுட்பத்தாலும் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை மட்டும்தான் உருவாக்க முடியும். ஒரு பண்பட்ட சமுதாயத்தை சான்றோர்களால் மட்டும்தான் உருவாக்க முடியும்.

Read More...
Paperback
Paperback 335

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

S. கலைவாணன்

 ஆசிரியர் S. கலைவாணன் அவர்கள் கடலூர்  அருகிலுள்ள பேரீச்சம்பாக்கம் என்னும் கிராமத்தில் விவசாய  குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கே சிரமமான சூழ்நிலையில் கல்லூரி படிப்பையும் சிறப்பாக முடித்து மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி கனநீர்  தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து 36 வருடம் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டமும் சுற்றுச்சூழல் அறிவியல் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

 உலக பொதுமறையாம் திருக்குறளின் ஈர்ப்பால் 1330 குறள்களையும் மிகத் தெளிவாக படித்து 'வள்ளுவத்தின்' உயரிய மாண்பினை அறிந்துகொண்டவர். தான் கற்றறிந்த கருத்துக்களை  "சான்றோர்களின் வாழ்வில் வள்ளுவம்" என்ற இப்புத்தகத்தின் வாயிலாக  விளக்கியுள்ளார்.

அனைவரும் வள்ளுவத்தின் நேரிமுறைகளை கற்று  வாழ்வில் பயனடைய வேண்டும் என்ற சிந்தனை இயற்கையிலேயே அவரிடம் இருந்த காரணத்தினால் தனக்கே உரிய பாணியில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் திருக்குறளை சான்றோர்களின் வாழ்வில் நடந்த சுவாரசியமான உண்மை நிகழ்ச்சிகளை 

கதைகளின் மூலம்  எளிய முறையில் விவரித்திருக்கிரார்.

 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து அதில் கூறப்பட்டுள்ள நீதிநெறிகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து மிக சிறப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பேராவலால் இந்த நூலை படைத்துள்ளார்.

 ஆசிரியர் நமது அன்னை பூமி, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மாசுபட்டு  விடக்கூடாது என்ற ஆதங்கத்தினாலும், நமது இயற்கை செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற வேட்கையினாலும் " A focus on environment through Thirukkural " என்ற புத்தகத்தை  எழுதி சென்ற ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் மூலம் வெளியிட்டார் என்பது கூடுதல் சிறப்பு.

Read More...

Achievements

+10 more
View All