Share this book with your friends

Unavu Kattupadu / உணவுக் கட்டுப்பாடு

Author Name: Dr. அனுராதா சுப்பிரமணியன் | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

நோய்நாடி நோய் முதல் நாடிஎன்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க பல்வேறு நோய்கள் உருவாக காரணங்களும் அதற்கேற்ற உணவு பரிந்துரைகளும்உணவே மருந்துஎன்னும் அடிப்படையில் அறிவியல் ஆய்வு முடிவுகளின் படி இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. சரியான சரிவிகித உணவும், நோய்களுக்கேற்ற உணவு முறைகளும், உணவின் அளவுகளும் உணவு எடுத்துக் கொள்ளும் நேரமும் சராசரி சாமான்ய மக்களின் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும் என்ற நம்பிக்கையில் கட்டமைக்கப்பட்டுள்ளதேஉணவு கட்டுப்பாடுஎனும் இந்நூல்.

Read More...
Paperback
Paperback 360

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Dr. அனுராதா சுப்பிரமணியன்

முனைவர். அனுராதா சுப்பிரமணியன்

இணைப்பேராசிரியர்

வேளாளர் மகளிர் கல்லூரி

திண்டல், ஈரோடு – 638012.

மதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியான சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்று கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் எம்.பில். மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். உணவியல் மற்றும் உணவுக் கட்டுப்பாடு முறைகள் குறித்து நாற்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில நூற்களையும் வெளியிட்டுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமாக பலவித கருத்துக்களை பரிமாற்றம் செய்துள்ளார். ஆராய்ச்சியும் அனுபவமும் இந்த நூல் வெயியிடுவதற்கு உரமாகி, பூக்களாக மலர்ந்து மணம் வீச வருகின்றது உங்களைத் தேடி.

Read More...

Achievements

+1 more
View All