Share this book with your friends

Uravuhalaith Thedi / உறவுகளைத் தேடி

Author Name: Va.supa.maa.pari | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

விழிப்புணர்வு நிரம்பிய எந்த மனிதருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது. அதை அங்கீரிக்கவோ, புரிந்து கொள்ளவோ பலரது ஆணவம் மறுக்கிறது. நெடுங்காலமாய்த் தொடரும் இப்போராட்டம் நீர்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைகளால் விரிவடைந்து கொண்டே செல்கிறது. 

நிலங்களுக்கு மட்டுமல்ல எல்லைகள். உறவுகளுக்குள்ளும் எல்லைகளும் நெறிமுறைகளும் வரையறுக்கப்படும் சமூகம் மட்டுமே வளர்ச்சி பெறுகிறது.

நேர்மையாளர்களும், பல்திறன் பெற்றவர்களும், பொறாமை உற்றவர்களால் போராட்டத்திற்கு ஆட்படுத்தப்படும்போது சமுதாயத்திற்கான அவர்கள் பங்களிப்பு பாதிக்கப்படுகிறது.

எப்பொழுதும் பொறுமையுடன் பலரின் எல்லை மீறுதல்களால் கொண்ட காயங்களை உள்வாங்கி இணங்கிச் செல்வதால் விதைகள் விருட்சமாகிக் கோடரி தேடுகின்றன. விதைகளை முளைக்கும் கணமே கிள்ளி எறிந்து விடுங்களேன்.

பெரும்பாலான நிகழ்வுகள் உங்கள் எல்லையற்ற பொறுமைக்கு ஏற்றவை அல்ல. தரம் வழுவாமல் தக்க வண்ணம் விரைந்து செய்லபடுவதே நமைக் காக்கும். அர்த்தமற்ற பொறுமை இயலாமையின் வெளிப்பாடாகிப்  பின்னர் பெற்ற காயத்தை விடப் பெருவலி தரலாம்.

இந்நூல் ஒரு வாழ்வியல் விளக்கு.  நான் பதிந்த நிகழ்வுகள் பலரது வாழ்விலும் உருமாறி நிகழ்ந்திருக்கலாம். இவ்விளக்கு வாழ்வில் ஆழமான புரிதலையும் தொடரவிருக்கும் மேடு பள்ளங்களை முன்னரே அறிந்து எதிர் கொள்ளும் வல்லமையையும் தரும் என நம்புகின்றேன்.

அன்பின் வழியது உயிர் நிலை என்ற வள்ளுவம் காட்டும் வழி, அனுபவத்தால் உணரப்படுவது ஒன்றே மானுடம் உய்வு பெற வழிவகுக்கும்.

Read More...
Paperback
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வ.சுப.மா.பாரி

வ.சுப.மா.பாரி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிகளில் பணியாற்றி உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் இந்தியன் வங்கியின் உயர் பயிற்றுக் கல்லூரியில் பயிற்சியாளராகச் செயலாற்றியவர். ஓய்வுக்குப் பின்னர் ‘நிதி, வங்கி மற்றும் காப்பீடு‘ தொடர்பான பயிற்சிகள் அளிக்கும் IFBI (Institute of Finance, Banking and Insurance) என்ற நிறுவனத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றிப் பல வங்கி அதிகாரிகளை உருவாக்கியவர். 

புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், மிகச் சிறந்த தமிழ் ஆளுமையும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான செம்மல் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் புதல்வர்.

இவரது முதல் படைப்பு ‘எதிர்ப்புகளின் திசை கிழக்கு‘ என்னும் கவிதை நூல்.

பங்குச் சந்தையில் ஆர்வமும் அனுபவமும் பெற்ற இவர் தற்போது நிதி ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

Read More...

Achievements

+3 more
View All