Share this book with your friends

Varalaaru Valartha Vaaigal / வரலாறு வளர்த்த வாய்கள் தொகுதி 1

Author Name: Iskra | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

“மடிந்து போன மக்களின் பிணவாடை உங்கள் நாசிகளைத் துளைக்கவில்லையா?” எனக் கிரேட்டா கேட்கையில் பருவநிலை மாற்றத்தின் பயங்கரம் உறைக்கும். 'ஆங்கிலேய காலனியாதிக்கக் கொடுங்கோன்மைக்கு' எதிராக ஒலிக்கும் சசி தரூரின் அறச்சீற்றம் தமிழில் தகிக்கிறது. சிங்காரவேலரின் உரை அவரின் வாழ்வும், பணியும் குறித்த ஆவலைப்பெருக்கும். சூசனின் வாக்குரிமைக்கான முழக்கம் 'இந்திய வாக்குரிமை வேங்கைகள்' (Indian Suffragettes) குறித்த கிளர்ச்சி தரும். மலாலாவின் நகைச்சுவையும், பேரன்பும், கல்விக்கனலும் ததும்பும் உரை நெக்குருக வைக்கும்.


மார்ட்டின் லூதர் கிங்கின் 'எனக்கொரு கனவு இருக்கிறது' உரையின் வீச்சில் 'தாழ்ந்த மலைச்சரிவுகள் மேலெழும்புகின்றன, மூர்க்கமான நிலங்கள் சமவெளி ஆகின்றன. நாம் இந்த வாய்ப்பந்தல் மழையில் நனைந்து, நிறைந்து போகிறோம். தவறவிடக்கூடாத, தவிர்க்க முடியாத படைப்பாளியாகப் பரிணமித்து இருக்கும் இஸ்க்ராவுக்கு வாழ்த்துகள்.

- பூ.கோ. சரவணன்

Read More...
Paperback
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இஸ்க்ரா

சதீஷ் குமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் இஸ்க்ரா எனும் பெயரில் இயங்கி வருகிறார். 2019-ம் ஆண்டில் நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில் பங்குகொண்டு, 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் சிறந்த 50 மாணவப் பத்திரிகையாளருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வரும் இவர் சமகால கருத்தியலைக் கட்டுரை, கவிதை, காணொளி மூலமாக தன் இணையதளம் மூலம் பதிவேற்றி வருகிறார்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலின் கீழ் திண்ணைப் பள்ளித் திட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார்.


நூற்றுக்கணக்கான கவிதைகளை இயற்றியுள்ள இவரின் வெளிவராத படைப்புகளுள் மூன்று குறும்படங்களும், ஒரு கவிதைத் தொகுப்பும் அடக்கம். 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியின் சார்பாக கலந்துகொண்ட இவர் 2020-ல் தன் முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.  (14C)

Read More...

Achievements