வேண்டுதல்.

By S. Naffia Gowser in Crime Thriller
| 4 min read | 4,131 வாசிக்கப்பட்டவை | பிடித்தமானவை: 1| Report this story

வேண்டுதல்

திகில்

சிறு கதை.

≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥.

அன்று என்ன நடந்தது?

என்ன நடக்கிறது?

டாக்டர் ஷோவியர் ஜெர்சி இறந்து எப்படி?

கொலையா?

இல்லை ஹார்ட் அட்டாக்கா?

பிரோத பரிசோதனை அறிக்கை என்ன சொல்கிறது?

பேய் தான் அடித்துக் கொன்றதா?

டாக்டர் ஷோவியர் ஜெர்சி மகள் டாக்டர் ஏஞ்சல் மேரி என்ன சொல்கிறார்?

அவருக்கு பைத்தியம் எப்படி பிடித்தது?

பைத்தியம் பிடித்தது மாதிரி நடித்தாரா?

இல்லை இறந்து போன ஹோஷாலிணி யின் ஆவி வந்து உடம்பில் புகுந்து ஆட்டகாசம் செய்ததா?.

மாத்திரவாதி நம்போதிரி யார்?

போலீஸ் என்ன செய்கிறது.

இது வரை நடந்துள்ள கொலைகள், தற்கொலைகளுக்கு காரணம் என்ன?

போலீஸ் தரப்பு என்ன சொல்கிறது?

வீட்டின் முன்பாக போலீஸ் எஸ். பி. வந்து விசாரணை செய்துக் கொண்டு இருந்தார்.

என்ன இறந்துப் போனார்?

அவர் இறப்பதுக்கு முன்பாக அவரிடம் யாரெல்லாம் வந்துப் போனார்கள் என்று டாக்டரின் மனைவி ரோஸ் மேரி ஜெர்சி விளக்கிக் கொண்டு இருந்தார்.

அவரோடு அவரின் அறையில் தானும் படுத்து இருந்ததாகவும். அவர் காலையில் பார்க்கும் போது உயிரோடு இல்லை.

எப்படி இறந்தார் என்று தெரியாது என்றும்.

ஆனால் எப்பவும் உள் தாழ்ப்பால் போட்டு இருக்கும் கதவு திறந்து இருந்தது என்றும். அதை டாக்டர் தான் திறந்துக் கொண்டு வெளியே போய் வந்தாரா என்று தெரியாது..

நன்றாக தூங்கு இருந்ததால் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும் சொன்னார்.

எத்தனை பிரேதங்களுக்கு அவர் பிரோத பரிசோதனை செய்து இருப்பார். இறுதியில் அவருக்கே இன்னோருவர் பிரோத பரிசோதனை செய்ய வேண்டியது ஆகி விட்டது.

ரோஸ்மேரி ஜெர்சி க்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது.

இந்த கொலை ஹோஷாலிணியின் ஆவி தான் கொன்று இருக்க வேண்டும்.

அதை தவிர வேறு யாரும் உள்ளே நுழைந்து கொலை செய்ய வாய்ப்பே இல்லை.

யார் மீதும் சந்தேகம் இல்லை அவளுக்கு.

டாக்டர் ஏஞ்சல் மேரி அப்பா சாவில் மர்மம் இருக்கிறது என்று மட்டும் அப்போதைக்கு சொன்னாள். ஆனால் பேய் தான் வந்து கொலை செய்து விட்டு பழியை தீர்த்துக் கொண்டது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

அந்த குருநகர் மக்கள் எல்லோரும் நடக்கின்ற கொலைகளைக் கண்டு பயத்தில் உறைந்து தான் போய் இருந்தார்கள்.

செகுந்தர் பள்ளம் இராவணன் நகரில் ஆவியின் அட்டகாசம். பொறுக்க முடியாமல் அந்த கிராம மக்கள் பயத்தில் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

காட்டு அம்மன் கோயிலில் இரவு நேரத்தில் பெண்ணின் அழும் குரல்.

தொடர்ந்து அன்று இரவே யாரோ கொலை செய்யப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணம் செய்தி தாளில் இதைப் பற்றி செய்தி வராத நாட்களே கிடையாது.

டேனியல் டிஷாஷோ அப்பாவின் இறப்பு பற்றி கொஞ்சமும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

இப்போது டாக்டரின் இறப்புக்கு இது வரை என்ன காரணம் என்பதை யாரும் கண்டு பிடிக்க வில்லை.

யாரும் இராவணன் நகருக்கு போகவே பயப்பட்டார்கள்.

அடுத்த பேயின் குறி யாராக இருக்கும்?

போலீஸ் கமிஷனர் தானா?

இப்போதைக்கு எதுவுமே சொல்லக் கூடாது. என்று நினைத்து இருந்தான் அவன்.

ராஜாவின் மௌனம் அவனுக்கு எதிராக தான் அமையும் என்பது அவனுக்கு தெரியவில்லை.

அந்த நேரத்தில் பனிமலரிடம் இருந்து போன் வந்தது.

போன் எடுத்தான் ராஜா.

சார் எப்படி இருக்கீங்க? உங்க வருங்கால மனைவி லிஷார்தா கூட பொழுது போகாமல் ஜாலியாக இருப்பிங்க போல

நான் உங்களுக்கு சிரமம் கொடுத்து இருந்தால் மன்னித்து விடுங்கள்.

நான் உங்களுக்கு போன் செய்தேன் தெரியாமல்.

இப்போ உங்களை நன்றாக தெரிந்துக் கொண்டேன்.

இனிமேல உங்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேன்.

இந்த போன் கூட நானாக செய்ய வில்லை. அம்மா தான் உங்களுக்கு போன் செய்து. அப்பாவுக்கு அடுத்த மாதம் பாத்தாம் தேதி பிரிவு உபச்சார விழா அவங்க ஆபீஸ் மேனேஜர் மற்றும் அப்பா கூட வேலை செய்தவர்கள், டிரைவர், கன்ரைட்டர்கள் எல்லோரும் இங்கே எங்க வீட்டுக்கே வந்து சிறப்பு செய்வதாக சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள்.

அவர்கள் போய் எங்களுக்கு அடுத்த மாதம் பத்தாம் தேதி கண்டிப்பா வைத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நிச்சயம் அன்று அப்பாவுக்கு பிரிவு உபச்சார விழா நடக்க இருப்பதால் அதற்கு உங்களை அம்மா கலந்துக்க வர சொல்லி போன் பண்ண சொன்னாங்க அதற்கு தான் போன் பண்ணேன் சார்.

இனி உங்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேன்.

ஹலோ... ஹலோ.... கொஞ்சம் இருங்க நான் பேசுவதை கொஞ்சம் கேளுங்கள்.

என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே போனை வைத்து விட்டாள் பனிமலர்.

ராஜாவின் மூஞ்சி சிறுத்து விட்டது. இங்கே இலங்கையில் இருந்து மாமாவும், அத்தையும், லிசு வும் வந்து இருப்பது எப்படி தெரியும்?

பனிமலர் சரியாக எப்படி நேரில் பார்த்தது போல் சொல்கிறாள். ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

எதிரே லிசு சிரித்தப்படி வந்துக் கொண்டு இருந்தாள்.

என்ன மாமாவோய்....

உங்க லவ்வர் கூட சண்டையா?

நான் வந்தது உங்களுக்கு தடையா?

சொல்லுங்க மாமாவோய்.... எண்டு கிட்ட நீங்க தப்பிக்க முடியாது ஒய்.

நீங்கள் இப்போ உங்க லவ்வர் கிட்டே கதைக்க காணோம்.

எண்டு வந்தது சண்டை.. சண்டை.. நானு. வரும் போது என்கிட்ட கூட சரியா கதைக்க கூட நீங்க வில்லை.

உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா

உங்களுக்கே தெரியாமல் நீங்கள் எழுதிய டைரியை படித்து இருக்கிறேன்.

அதில் ஒரு கவிதை எனக்கு பிடித்து இருந்தது.

அதை நான் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து இருக்கிறேன் அது இப்போ படிக்கிறேன் பாருங்க.

என்னவளே

==========

உன்

சிரித்த முகம்

சிறப்பைக் கூட்டி

இன்னும்

உன்னிடம் இருக்கும்

சிறப்புகளை

நீ

எப்போது காட்டுவாய்.

இதயத்தில்

கொந்தளிக்கும்

உன்

அன்பை

எப்போது கொட்டி

தருவாய்?

ஊர்

ஊராய்ச் செல்லும்

என்

உணர்வுகள்

உன்னிடம்

வரவில்லையா !?

தினமும் உனக்காக

ஏங்கும்

என் உள்ளத்துக்கு

பதில் சொல்லி விட்டு

போ..

என்ன மாமா..?

எப்படி எழுதுறீங்க ரொம்ப அழகா இருக்கு?

இன்னும் உங்க டைரியில் இருந்தது ஆனால் அது உங்களுக்கு தெரியாமல்

எடுத்து படிக்க என் மனசு இடம் கொடுக்க வில்லை.

அது உங்க அனுமதியோடு படிக்கலாம் என்று இருந்து விட்டேன்.

டைரி என்றதும் ராஜாவுக்கு அவன் காரில் வைத்த அவன் டைரி நினைவுக்கு வந்தது.

வேகமாக எழுந்து போய் கார் திறந்து தேடினான் அது கிடைக்க வில்லை.

போன் செய்து விட்டு மலர் தோட்டத்துக்கு போனால் கையில் ராஜா எழுதிய டைரி இருந்தது. அவளையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் பெறுகியது.

ரொம்ப நேரம் தனிமையில் அழ வேண்டும் போல் அவளுக்கு தோன்றியது.

அவள் அவனிடம் அப்படி பேசி இருக்க கூடாது தான்.

யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக அப்படி பேசியது ரொம்ப தவறு என்று அவளின் உள் மனம் சொல்லியது.

அந்த டைரியில் ஒரு வார்த்தை கூட அவன் மாமன் மகள் லிஷார்தாவைப் பற்றி குறிப்பிடவே இல்லை.

அவள் போட்டோ பக்கத்தில் அவன் அம்மா போட்டோ ஒட்டி வைத்து இருந்தான் ராஜா..

அப்போ என்ன அர்த்தம்?

அவன் அம்மாவை நேசிப்பதை விட ரொம்ப அதிகமாகவே பனிமலரையும் அவன் நேசித்து இருக்கிறான் என்று பொருள்.

அவள் அவனுக்கு போன் செய்து சாரி கேட்கலாமா என்று கூட நினைத்தாள்.

ச்சி அப்படி செய்யக் கூடாது. நான் இப்படி பேசி இருக்கிறேன். உண்மையான பாசம் இருந்தால் இந்நேரம் போன் போட்டு இருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை.

அப்போ என்ன அர்த்தம்?

அவன் அவளை விட்டு வெகு தூரம் போய் விட்டது போல் ஒரு உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.

அவன் டைரியை அவள் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள்.

அவனை சுற்றியே எண்ணங்களும் சிந்தனைகளும் அவளுக்குள் ஓடியது.

மலர் என்ன செய்யற வா அப்பா எதுக்கோ கூப்பிடுகிறார் என்று சங்கீதா வெளியே வரவும்

அவளுக்கு ராயகோட்டையில் இருந்து ரவி போன் பண்ணினான்.

அவனுக்கு நம்பர் சங்கீதா தான் கேட்டதால் கொடுத்து அனுப்பி இருந்தான்.

என்னப்பா?

ஒன்னும் இல்லை ஆண்ட்டி. அங்கிள் எப்படி இருக்கிறார். அதை கேட்க தான் போன் பண்ணேன்?

அப்படியா ரொம்ப நன்றி பா இப்போ முன்பை விட நல்லாவே இருக்கிறார். பேச கூட ஆரம்பித்து விட்டார்.

ஒன்னு ஒண்ணா அவருக்கு ஞாபகம் வருது.

அந்த ஆண்டவன் புண்ணியத்தில் அவர் முற்றிலும் குணம் ஆகி விடுவார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

என்ன ஆண்ட்டி அங்கிள் ஆபீஸ்சில இருந்து போன் வந்ததா?

எப்போ பங்ஷன் வைத்து இருக்கீங்க?

தேதி முடிவு பண்ணி டெப்போ மேனஜர் சொல்லி விட்டாரா?

அம்மா அம்மா அந்த ஆளை வர சொல்லி கூப்பிட வேண்டாம் என்று மலர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே.

அதே வார்த்தை அவன் கேட்டு விட்டான்.

என்ன ஆண்ட்டி பதிலே இல்லை.

எப்போ ஃபங்ஷன் வைத்து இருக்கீங்க

அதற்கு என்ன பதில் சொல்லுவாள்?

மலரின் மூஞ்சியை பார்க்க.

போன்னை அம்மா கையில் இருந்து பிடுங்கி அதை ஒன்னும் பேசாமல் வைத்து விட்டால் மலர்.

வாடி எதுக்கு அப்பா கூப்பிடுறாரு என்று போய் பார்ப்போம் என்று அவர் ரூமுக்கு போனார்கள் இருவரும்.

அதிசயம் ஆனால் உண்மை..

நம்பவே முடியவில்லை இருவருக்கும்.

ஆமாங்க

டிரைவர் சங்கரன் எழுந்து உட்கார்ந்து இருந்தார்.

எழுந்து உட்கார்ந்து தான் மலரையும் சங்கீதாவையும் அவர் கூப்பிட்டு இருக்கிறார்.

அப்பா அப்பா என்று மலர் ஓடிப் போய் அப்பா சக்கரனின் எதிரில் நிற்கவும் சங்கரன் மலரின் கைகளைப் பற்றி அவரின் கண்களில் ஒற்றிகொண்டார்.

அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்துக் கொண்டு இருந்தது.

அம்மா.. அம்மா... அப்பாவுக்கு எல்லா ஞாபகமும் வந்து விட்டது என்று அவள் சந்தோசத்தில் அம்மா சங்கீதவை அணைத்துக் கொண்டாள்.

சங்கீதாவின் கண்களில் கண்ணீர் ஓடியது.

இது ஆனந்த கண்ணீர்..

அந்த ஆண்டவனுக்கு வேண்டுகிட்ட குல தெய்வதுக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வதாக வேண்டுதல்........

≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥

.

X
Please Wait ...