சாந்தி.

By S. Naffia Gowser in Romance
| 4 min read | 1,595 வாசிக்கப்பட்டவை | பிடித்தமானவை: 1| Report this story

சாந்தியின் கண்ணீர்

பீறிட்டு அழுது விட்டாள்.

அம்மா வா! அப்பா வா!

திரும்ப அவனையே கேட்டாள். அவள் முகத்தில் துயரத்தின் சாயல் படர்ந்து காணப்பட்டது.

மாமு ஒன்றும் கேட்காதீர்கள்!என் மனம் கொதிக்கிறது.

அவள் கண்களில் கண்ணீர் கரையை உடைத்துக் கொண்டு கீழே விழும் தருணத்தை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

தலை நிமிர்ந்தாள்.

அவள் முகம் விம்மலால் பருத்து இருந்தது.

இதோ பாரு நாகு உன் முகத்தைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பரிதபாமாக இருக்கிறது.

உன் மனதில் எவ்வளவு துன்பத்தை அடக்கிவைத்து இருக்கிறாய் என்பது எனக்கு நன்றாக புரிகிறது..

அவள் முகத்தைப் பார்த்தான் விக்ரம்.

என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா சாந்தி?

எனக்கு எது பற்றியும் கவலை இல்லை மாமா யார் என்ன சொன்னாலும் சரி உன்னை கண்ணாலம் கட்டாம வேறு யாரையும் கண்ணாலம் பண்ண மாட்டேன்.

என் உடம்பில் உசுரு இருக்கும் வரை தேவர் பரம்பரை என்று வாய் கிழிய பேசுகிறார்களே அந்த வம்சத்தில் வந்த பொண்ணு நான் என்பதை ஏன் மறந்து விட்டார்கள்.

சரி நான் கிளம்புறேன் நீ அப்புறம் எனக்கு போன் பண்ணு. சரி மாமா இப்படி நான் கிளம்புறேன்.

கார்மேகங்கள் கண்டு மகிழ்ந்து செல்லும் நிலவு கொஞ்சம் வழி விட்டு போக அதன் கருணை மழையில் நனைந்துக்கொண்டே விடிகிறது இரவு

பூலோக ரம்பைகளாக சிரிக்கிறது ஓடைகள்.

கலவி கண்டு கண் உறங்க மறுத்து மேல பறக்க ஆத்தி சுவடியை படித்துப் பார்க்கிறது சில் வண்டுகள்.

கூட்டம் கூட்டமாய் பறந்த வண்ணத்துப்பூச்சிகள் அழகின் மலர்கள் மீது அமர்ந்துகண்களுக்கும், கற்பனைகளுக்கும் எட்டாத ஒரு இன்பத்தை அள்ளுகிறது.

இனம் தெரியாத இன்பம் அவள் இதயத்தில் எழ மெல்ல மெல்ல நடந்து வீடு வந்து சேர்ந்தாள் சாந்தி.

சொக்கு போட்டு திரியுதுங்க கேட்க ஆள் இல்லை என்றால் இப்படி தான்.

ஊமைப் போல் இருக்குங்க அப்புறம் எல்லா பகுசும் தெரியுது.

பொண்ணு பொண்ணுங்க அடிக்கக் கூடாது திட்டக்கூடாது என்று நினைத்து விட்டால் பின்னாடி ரொம்ப கஷ்ட்டப்பட வைக்குதுங்க.

எல்லாம் ஐயோக்கியர்கள்சாமியார் என்று யாராச்சும் நாய்கள் வந்தால். சாணியில் தொடைப்பம் நனைச்சு வெளுத்து வாங்க வேண்டும். நாதாரிப் பசங்க.

ஊரையும் ஏமாந்த பொண்ணுகளையும் நாசப்படுத்தி கெடுத்து குட்டிச்சுவர் பண்ணி வாழ்க்கையை வீணாக்கி விடுறாங்க.

எதுக்கு ராசாத்தி இப்படி காலையிலே கரைச்சு தெளிச்சிட்டு இருக்க.?

அது ஒன்னும் இல்லக்கா நேத்து பார்த்து யாரோ ஒரு சாமியார் வந்து இந்த வீட்டில் தோஷம் இருக்கு. பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாக போகும் என்று சொல்லி இருக்கிறான்.

அது உண்மை என்று நம்பி அந்த சாமியார் சொன்ன மாதிரி நகைகளை எல்லாம் கழற்றி தாம்பலத்தட்டில் போட்டு விட்டு பூஜை செய்றேன்னு சாம்பிராணி புகை போட்டு இருக்கிறான்

புகை சுவாசிக்க எல்லோருக்கும் மயக்கம் வந்து சுருண்டு படுத்து இருக்காங்க. உடனே கழற்றிப் போட்ட எல்லா நகைகளையும் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து கம்பி நீட்டி இருக்கிறான் அந்த சாமியார்.

பாவம் அக்கா பொண்ணு கலியாணத்துக்கு சேர்த்து வச்ச நகைகள் எல்லாம் எடுத்துக் கிட்டு போய் விட்டு இருக்கிறான். போலி சாமியாருங்க நிறைய பேர் வந்து இருக்காங்க.

சரி நான் போறேன் அக்கா என்று கிளம்பினாள் அந்த பக்கத்து விட்டு அக்கா.

ஏண்டி எப்போ வைக்குறாங்கலாம் வளைகாப்பு.?

மாப்பிளை சரவணனுக்கும் அடிச்சிச்சி பாருடி அம்மா லாட்டாரி.

தேவர் மகள் மூழ்காம இருக்கிறா என்று கேள்விப் பட்டதும் ஒன்னும் கையிலே பிடிக்க முடியலே வானதுக்கும், பூமிக்கும் அப்படி குதிக்கிறாரு.

போற்றிப் பாடடிப் பொண்ணே.

தேவர் காலடி மண்ணே!

எட்டு பட்டி எல்லாம் சோழ பரம்பரை பேச

விருமாச்சி சாமி கூட வீர கல்லுப்பட்டி தேவர் பெருமை எல்லாம் போற்றிப் பாடடி கண்ணே என்று!

யாரும் எதிர்பார்க்கவே இல்லை. மாப்பிளைக்கு ராயல் என்பீல்ட் புல்லட் வந்து வாசலில் நின்ன உடனே சொக்கி போய் விட்டான் அவன்.

மாமா அத்தை என்னை மன்னிச்சிருங்க! பாக்கியா என்னை மன்னிச்சிரு என்று வச்சான் பாரு ஒப்பாரி.

ஐயோ சாமி அதிராமப்பட்டினம் ஆளு எப்படி நடிக்கிறான் பாரு.

எல்லாம் காசு சாமி காசு உலகமே இதில் தான் மயங்கி கிடக்கு. காசு பணம் இருந்தா போதும். உலகத்திலே எல்லாம் சுகம் தான். பாழாப் போன உலகத்திலே காசு பணம் தான் பெருசு.

காசு பணம் இல்லாட்டி காரித்துப்பும் பெருசு.

நகை வேற போட்டு நலுங்கு கூட வைச்சுட்டாருன்னா பாரேன்.

வேண்டா மணி நர்ஸ் அக்கா வியந்துப் போனார். இவ்வளவு நல்ல இடம் இவனுக்கு கிடைச்சி இருக்கே என்று ஆச்சர்யமா இருந்தது.

சரவணன் அப்பா சங்கரன் பிள்ளை தேவருக்கும், அவர் மனைவி தங்கமணி அம்மா வுக்கும் ஒன்னும் தாங்கல சந்தோசம் தலைக்கு ஏறி அவர்களை திக்கு முக்காடா வைத்தது..

அக்கா சாந்திக்கு திடீர்னு விசேஷம் செய்வது ராமலக்ஷ்மிக்கு தெரியவில்லை.

என்னவோ அவளுக்கு நாலு நாள் காலேஜ் லீவு விட்டு இருந்தார்கள்.

எல்லாம் முடிச்சிட்டு தேவர் ஐயா உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

சாந்தியை இப்போ எங்க கூட அனுப்பி வையுங்கள்.

எப்போ வளைகாப்பு வைக்கிறிங்களோ அதுக்கு இரண்டு நாள் முன்னாடி சொல்லுங்க நாங்க என்ன செய்யணுமோ அதை செய்து அனுப்புகிறோம் சரியா!

என்ன சொல்றிங்க சம்மந்தி.

இதில் சொல்றதுக்கு என்ன இருக்கு சம்மந்தி நாம் நம்ம வழக்கம் எதுவோ அதன் பிரகாரம் செஞ்சிட்டா போச்சு.

அதும் சரி தான்.

அம்மா சாந்தி நீ என்ன சொல்கிறாய்?

அது என்ன சொல்லும் பாவம் பெரியவங்க பார்த்து எடுக்கற முடிவு தான்.

ஏலே.. நான் ஒருத்தி இங்கே இருக்கேன்னே அட கிறுக்கு சாமராணி பையலே..உனக்கு தெரியலயா?

எப்பவும் மாப்பிளை வீட்டில் தான் பொண்ணு இருக்கும். சீமந்தம் முறைப் படி செஞ்சி அப்புறம் தான் தாய் வீட்டுக்கு கூப்பிட்டு வருவாங்க.

வளைகாப்பு செய்து கூப்பிட்டு வந்து பிரசவம் தாய் வீட்டில் பார்த்து பெயர் சூட்டி அப்புறம் தான் அனுப்பி வைப்பாங்க.

இது காலத்துக்கும் நடந்துக்கொண்டு வரும் வழக்கம் ஆகும்

தங்கம்மாள் சம்மந்தி சம்மந்தி என்று சங்கீதவள்ளி யிடம் வலிய வலியப் போய் ஆசைத் தீற பேசினாள்.

பெயருக்கேற்ற மாதிரி குணத்தில் தங்கம் தான் அவள்.

மனைவிக்கு தகுந்த மாதிரி கணவர் சங்கரன் தேவர்.

எல்லோரும் காபி சாப்பிட்டு கிளம்பி போக தயாராகிக் கொண்டு இருந்தார்கள்.

அத்தை.....அத்தை....

அடிச் செருப்பாலே நாயே!

போனில் பேசும் போது என்னமா பேசினான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள் சங்கீதாவள்ளி.

கொடுத்து இருக்க கூடாது அவள் தலையெழுத்து அவனுக்குன்னு வைச்சி இருக்கும் போது என்ன செய்வது விதியே என்று சம்மாளித்து தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை.

தன்பொண்ணுவாழ்க்கைகெட்டுவிடக்கூடா து என்று தான் அன்று பல்லை கெட்டியாக கடித்துக்கொண்டாள்.

எப்பவோமே பொண்ணை ஒருத்தன் கையில் பிடிச்சி கொடுத்தபின் அனுசரிச்சு தான் போகணும். இல்லை என்றால் பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போகும்.

பூவாத்தா சொன்ன மாதிரி சாந்தியை அனுப்பி வைத்து விட்டு ஏழாவது மாதத்திலேயோ அல்லது ஒன்பதாவது மாதத்திலேயோ

போய் சீமந்தம் செய்து அழைத்து வர வேண்டும்.

எல்லோருக்கும் ஒரே சந்தோசம். சாந்தியை அனுப்பி விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் சங்கீதவள்ளி.

ஹாய்.... மாமு... மேரி பியாரி ஜான் எப்படி இருக்கே.

ஓய்.. குட்டிமா கோபிரா குட்டி (நாகம் )

நாகவள்ளியை இப்போ இவன் கோபிரா குட்டி என்று கூப்பிட்டி கலாக்க ஆரம்பித்து விட்டான்.

மாமு ரொம்ப கஷ்ட்டமா இருக்குடா எழ முடியல.

அப்போ படுத்துக்கிட்டே இரு.

பாவிப் பையன் மவனே..

இரு எங்க அப்பா கிட்டே சொல்கிறேன்.

சொல்றா சொப்பு வாயா.

சொல்லுடி என்ன விஷயம்.?

மாமு என்னை சென்னைக்கு அனுப்புவங்க போல் இருக்குடா அதன் மேலே படிக்க கவுன்சிலிங் வைச்சு இருக்காங்க.

போடி போய் ஒழுங்கா படிச்சிட்டு வா உனக்காக மூணு வருஷம் என்னடி முன்னூறு வருஷம் கூட காத்திட்டு இருப்பேன்.

ரொம்ப பெயித்திக்க வேண்டாம் மச்சான்.

நீயும் வாடா ரூம் எடுத்துட்டு சென்னையிலே நான் படிப்பை முடிக்கிற வரைக்கும் துணையாக.

ஏண்டி உங்க அப்பன் விடுவானா?

என்னடா உங்க மாமனாரை கொஞ்சமும் மரியாதை இல்லாமே பேசுறே!

யார் அந்த போண்டி வாயன் நம்மை கலியாணம் செய்து சேர்த்து வைக்காம

சர்ப தோஷமா சாபமா. இதில் எல்லாம் இன்னும் நம்பிட்டு இருக்காங்களே!

டேய் மாமு ராத்திரியில் எப்படி தூங்குவேன்?

ஏண்டி கண்ணை மூடிட்டு எல்லோரும் தூங்கற மாதிரி தான் தூங்குவேன்.

பாவி.. உன் கூட பேசுறேன் பாரு.

எனக்கு தூக்கமே வருவது இல்லை டா. ஏண்டி...

உன் நினைப்பு தான்.

ஓய் கோபிரா குட்டி சும்மா ரீல் விடாதே இந்த சினிமா டைலாக் கேட்டு கேட்டு.காது புளிச்சு போச்சு.

ஏண்டி வேற எதாவது புதுசா கண்டுபிடிச்சி சொல்லுங்கப்பா!

நாளைக்கு வீட்டுக்கு வர்றியா!

ஏன் எதாவது பிளான் பண்ணி வச்சு இருக்கியா சாமி.

போடா பக்கி..

எங்கே போ சொல்லறே கோப்ரா குட்டி.

இப்படி சொல்லிட்டே இரு உன்னை கோபிரா வாக வந்து கொத்தி உசுரு எடுத்து விடுகிறேன்

ஓய் இப்போ மட்டும் நீ என்ன செஞ்சிட்டு இருக்கிற தாய்.

ஏண்டா ஊமை குசும்பு மாதிரி இருந்துட்டு இப்போ என்னம்மா பேசுறே அப்பனே!

டேய் மாமு உனக்கு ஒரு முக்கிய விஷயம் வச்சு இருக்கேன்டா சொல்லவா?

சொல்லுடி மிட்டா பட்டி ஜாமீன் வெள்ளிங்கிரி தேவர் வம்சத்தில் பிறந்த நாகலோகத்தில் இருந்து நழுவி விழுந்து வெள்ளிக்கிழமை பிறந்த

ஹரிதாஸ் தேவர் வீட்டு ஒரே வாரிசு உக்கறையின் லடாயில் தப்பித்து வந்த டாக்டர் கத்துக்குட்டி அவர்களே கோபிரா குட்டி.

டேய் சைத்தான்கி பச்சா.

உன் எக்ஸ்காதலி சாந்தி மூழ்காம இருக்காளாம். அவங்க அப்பன் ராயில்என்பீல்ட்புல்லட் வாங்கி வைர மோதிரம் போட்டு வடை பாயசத்தோடு விருந்து வச்சி அவனை மாப்பிளையோடு அனுப்பி வச்சி இருக்கிறானாம் அப்பனே.. இது இது வரையில் கிடைத்த தகவலின் படி...

டேய் மாமு... மாமு.... டேய்.. மாமா

சாரி டா... ப்ளீஸ் ப்ளீஸ்.. மாமு.. பேசுடா????????

≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥

X
Please Wait ...