Share this book with your friends

Sindhikka Sirukadhaikal / சிந்திக்க சிறுகதைகள் பாகம் I

Author Name: Ramanakumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சிந்தை - மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் அரியதொரு பொக்கிஷமாம் சிந்தையில் உதித்த சில எண்ணங்களை உங்கள் முன் இன்று சிறுகதைகள் என்கிற ஒரு பெட்டகத்தில் வைத்து கொடுத்துள்ளேன்.

சிறுகதைகளாக: -

பரிசு: திறமைகள் கொண்டோர் வாழ்வினில் வெளிச்சம் என்றுமே உண்டு, இது உலகியல்பே!

பிச்சைக்காரன்: வயது முதிர்ந்த பெற்றோர்களை அநாதைகளாக விடும் பிள்ளைகளே உண்மையில் பிச்சைக்காரர்கள்!

பிறந்த மண்: நகரம் நோக்கி பிழைக்க வருவோர் மத்தியில் கிராமத்தில் வாழ்வைத் தேடும் சிலர்!

கல்யாண பரிசு: திருமணம் சிறக்க வாழ்த்துக்களுடன் பரிசில் வழங்குவோர் மத்தியில் கைத்திறனைப் பரிசிலாய் வழங்கிய விசித்திரன்!

பலசாலி: பூதகணமோ மனித இனமோ, இவரில் யார் பலசாலி என்பதை அவரது சுபாவமே வலியுறுத்தும்!

நடைவண்டி: மகளென வாழும் எந்தவொரு உயிருக்கும் தந்தையென குடியிருக்க ஒரு கோவிலிருக்கும்!

மிஸ் மாலதி: பெண்களும் சாதிக்க வேண்டியது நிச்சயமென்றாலும், கடவுள் தனக்குத் தந்த பொறுப்பிலும் தவறக்கூடாது தானே!

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிந்தனையில் உங்களுடன் இரமணகுமார்

1983 ஆம் வருடம் அக்டோபர் திங்கள் 3 நாள் இம்மண்ணில் கால்பதித்த நான் படிப்பில் சிறந்து பட்டங்களை பெற்று உயர்ந்த ஒரு மனிதர் அல்ல. ஆனால் நான் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை வாழ்க்கை பாடமாக கொண்டு இன்றுவரை எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதை முறைசாரா ரீதியிலேயே கற்று தேர்ந்து பல துறைகளில் போதிய அறிவை பெற்று உங்கள் முன் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்பதை நினைத்தால் அது எனக்கு ஆனந்த களிப்பை தருகிறது.

கற்பதில் என்னை மந்தநிலையுடன் படைத்த கடவுள் பிறருக்க கற்பிக்கும் ஆற்றலை சற்று கூடுதலாகவே எனக்குள் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. ஆனால் நான் ஒரு ஆசிரியனாக இருக்க விரும்பவில்லை. ஆனாலும் எனக்குள் எழும் கற்பனைகளையும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பிறக்கு இப்படி என்னால் இயன்றவரை புத்தக வாயிலாக எடுத்து சொல்ல வேண்டுமென தீர்மானம் செய்து இந்த கதைகள் வாயிலாக உங்களுடன் நான் என் பயணத்தை துவங்குகிறேன்.

Read More...

Achievements

+2 more
View All