Share this book with your friends

AETTIL ILLATHA MAHABARATHA KATHAIGAL / ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்

Author Name: T. Koventhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வீமனும் விரதமும்
இராமாயணம், மகாபாரதம் இரண்டும் இதிகாசங்கள். இவை மக்களிடம் பரவி வழங்குவதைப் போல், வேறு எந்தக் காவியமும் வழங்கப்படவில்லை

வால்மீகியும், வியாசரும் கூறாத பல இதிகாசக்கதைகள், செவி வழிச் செய்திகளாக - நாடோடிக் கதைகளாக வழங்கி வருகின்றன.

அவற்றுள் ஓர் அறிய செய்தியை இங்க காண்போம்

பஞ்சபாண்டவர் ஐவருள் ஒருவனாகிய, வீமன் ஆயிரம் யானைகளின் பலம் ஒருங்கே பெற்றவன். பிறக்கும் போதே பெரும்பலத்துடன் விளங்கினான். ஒரு நாள் தாயான குந்திதேவி, கைப்பிள்ளையான வீமனை ஒரு பாறையில் நழுவவிட்டுவிட்டாள். “ஐயோ! குழந்தையின் உடல் நொறுங்கிப் போயிருக்குமே!” என்று அஞ்சிக் குழந்தையை எடுத்தாள். என்ன விந்தை குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. சிறு சிராய்ப்புக் கூட உடம்பில் இல்லை.

ஆனால குழந்தை விழுந்த இடத்தில் பாறையில் குழியிருந்தது. வீமனின் உடல்வலிமையைக் காட்டுவதற்காக வழங்கப்பட்டுவரும் செவிவழிச் செய்தி இது.

வீமன் உண்பதற்கு உணவு வண்டி வண்டியாக் வேண்டும் பகாசுரனுக்காக அனுப்பிய ஒரு வண்டி உணவையும் வீமன் ஒருவனே உண்டு விட்டான்.

பகாசுரன் மிக வலிமை வாய்ந்த அரக்கன். தன் உணவை வீமன் உண்பதைக் கண்டான். சினம் கொண்டான். ஓடிவந்து வீமன் முதுகில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.

வீமன் “அப்பாடா உண்ட சோறு விக்கியிருந்தது. இப்போது உள்ளே இறங்கிவிட்டது” என்றான். பல் தேய்க்கும் குச்சி முழுப் பனைமரந்தானாம். இவ்வாறு பல செய்திகளை மக்கள் வியந்து பேசுவதை இன்றும் காணலாம்.

பெருந்தீனியனாக இருந்தாலும் வீமன் ஒழுக்கம் தவறாதவன். பக்தி நிரம்பியவன்.

ஆனால் பிறர் காணும்படி பூசை, அர்ச்சனை, தியானம் ஏதும் செய்யமாட்டான்.

அவன் பூசனை அனைத்தும் மானசீக பூசனையே.

Read More...
Paperback
Paperback 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

த. கோவேந்தன்

த. கோவேந்தன் என்பவர் தமிழ் எழுத்தாளரும், கவிஞருமாவார். 1932ம் ஆண்டு வே.மு. தங்கவேல், குயிலம்மாள் தம்பதியினருக்கு மகனாக கோவிந்தன் பிறந்தர். இவருடைய இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும்.

Read More...

Achievements

+15 more
View All