Share this book with your friends

KADALUKKU APPAAL (Novel) / கடலுக்கு அப்பால் நாவல்

Author Name: P. Singaram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நாவல் + மதிப்புரைகள், விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்

கடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுர கர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும் வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை . குறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற்கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.

ஆசிரியர்

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப. சிங்காரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி கிராமத்தில் நாடார் பேட்டையிலுள்ள 4-2/102 என்று இலக்கமுள்ள வீட்டில் வாழ்ந்துவந்த மூக்க நாடார் என்ற கு.பழநிவேல் நாடார்-உண்ணாமலை அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாக ப.சிங்காரம் 12-08-1920 அன்று பிறந்தார். அவரது அண்ண ன்கள் ப.சுப்பிரமணியம், ப.பாஸ்கரன். அவரது தாத்தா ப.குமாரசாமி நாடார் அவர்களுடன் சேர்ந்து தந்தையார் சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார். சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியிலும் மதுரை செயின்ட்மேரிஸ் பள்ளியிலும் பயின்றார். பின்னர் 1938ம் ஆண்டு சிங்கம்புணரியைச் சார்ந்த செ.கா.சின்னமுத்துப்பிள்ளை இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் வைத்திருந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காகக் கப்பலேறினார். 1940ல் இந்தியா வந்து மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியாற்றினார். வாலிப வயதில் ப.சிங்காரம் வெளிநாட்டுத் துணியிலான ஆடைகள் அணிந்து நறுமணம் கமழ மிடுக்குடன் காட்சியளிப்பாராம். இந்தோனேஷியாவில் வசிக்கும்போது திருமணம் செய்து கொண்டார். அங்கு தலைப்பிரசவத்தில் அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர். அவரது மனைவியின் பெயர், ஊர் போன்ற தகவல்களை அறிய இயலவில்லை.

Read More...

Achievements

+15 more
View All