Share this book with your friends

muthal vetriyin suvai / முதல் வெற்றியின் சுவை

Author Name: Karisal Kazhuganaar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

தோல்வியை தழுவாத மனிதர்களே இவ்வுலகில் நாம் பாத்திருக்கவே முடியாது.  என்ன தான் நாம் எவ்வளவு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருந்தாலும் நாம் அந்த தோல்விகளை நினைத்து வருந்தி வீட்டிற்குலேயே முடங்கிவிடப் போவதில்லை.  என்றாவது ஒரு நாள் நமக்குரிய வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்ற ஒரே ஆசையிலும், எண்ணத்திலும் தான் நாம் தினமும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.  ஒவ்வொரு சிறு தோல்வியை கண்டும் நாம் நம் வீட்டிற்குலேயே முடங்கி போய்விட்டால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவனுடைய முதல் தோல்வியிலேயே மறைந்து போகி இருக்கும்.

பல தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியின் ருசியே ஒரு தனி சுவை தான்......

இந்நூல் என்றவாது ஒரு நாள் நம்முடைய ஆசையும் நிறைவேறி விடாத என்ற கனவுடன் பயணிக்கும் பல சாதிக்க துடிக்கும் கவிஞர்களின் ஒரு ஆகச்சிறந்த படைப்பு.  இந்த நூலை படிக்கும் ஒவ்வொருவரின் கனவுகளும் இப்படி தான் நம்முடைய கனவுகளும், ஆசைகளும் நிறைவேறும் என்ற ஒரு நம்பிக்கை உடன் உங்களை உங்கள் வெற்றியின் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.

 எங்கள் கவிஞர்களின் எழுத்தாணியால் செதுக்கப்பட்டு உங்கள் கைகளில் தற்போது ஒரு சிற்பம் போல் உங்கள் கைகளில் தவழ்கிறது.

Read More...
Paperback
Paperback 275

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கரிசல் கழுகனார்

இவர் பெயர் கரிசல் கழுகனார்.  இவர் இளம் அறிவியல் காப்பீட்டு கணித அறிவியல் பட்டதாரி.  இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கரிசல் காடுகள் சூழ்ந்த பெருமத்தூர் கிராமத்தில் பிறந்தவர். 

     “ அணுகுண்டு ஒரு முறை தான் வெடிக்கும், ஆனால் புத்தகமானது திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் ” என்ற பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்களின் வரிகளால்  ஈர்க்கப்பட்டு, பல புத்தகங்களுக்குள் மூழ்கினார்.  இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் ஒரு வரி கவிதையில் தொடங்கி பல தொகுப்பு கவிதை புத்தகத்தில் இணை எழுத்தாளராய் கவிதை எழுதி வருகிறார், சமூகம் மீது கொண்ட அக்கறையால் இன்று இவர் நம் சமூகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மையமாக கொண்டு “ தோற்றம் முதல் அழிவு வரை ”  என்னும் கட்டுரை புத்தகம் ஒன்றையும், மேலும் இவர் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளையும், இவரை சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும்  கவிதைகளாக தீட்டி “ கரிசல் காட்டின் கடைசி மழை துளிகள் ”  என்னும் கவிதை புத்தகம் ஒன்றையும் இவர் இயற்றியுள்ளார். இந்த இரண்டு புத்தகங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் விரைவில் வெளியாக உள்ளது. 

     மேலும் இவர் உலகறியா நம் பாரம்பரிய மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், நம்முடைய ஒவ்வொரு மாவட்டதின் உடைய பேச்சு வழக்கங்கள் ஆகியவற்றை இந்த உலகிற்கு வெளிகொண்டு வருதற்காக “ அகழ் சிற்றிதழ் – பெரம்பலூரின் சிற்றிதழ் இதழாசிரியராக செயல்பட்டு வருகிறார் ”.                 

Read More...

Achievements

+5 more
View All