Share this book with your friends

Muthu Kathaigal / முத்துக் கதைகள்

Author Name: J Marimuthu | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கதை நோக்கு, குடும்பம் என்ற அமைப்பை மையமிட்டும் கணவன் மனைவி என்ற உறவினை சுற்றியுமே பின்னப்பட்டு சுழன்று கொண்டிருக்கிறது. அவை கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகளை ஒத்தது என்றும் சொல்லலாம். இதில் சிலக் கதைகளுக்கு இலக்கியத்தரச் சான்றிதழை எள்ளளவும் ஐயமின்றி அளிப்பேன். குறிப்பாக மலரும் முள்ளும், கல்யாணமாம் கல்யாணம், கடவுள் தந்த ஓய்வு போன்றவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒவ்வொரு கதையும் வாழ்வினோர் அங்கத்தை காட்டி வாழ்க்கையை காட்டும் கருத்துடையதாய் சமைக்கப்பட்டிருப்பது ஆழம் ஆம். அந்த ஆழம் என் தந்தையின் அனுபவத்தின், சமூக கவனிப்பின், இலக்கிய ரசனையின், பரந்துப்பட்ட துறை அறிவின் வெளிப்பாடு. தலைப்பிரசவம், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள், காதலர் தினம் முதலிய கதைகள் தென்றல் இதழில் பெரும் வாசகர் வரவேற்பைப் பெற்ற கதைகளாகும். அவ்வகையில் வெளிப்படையாய் அதன் தரத்தை உணர்ந்து கொள்க. இதோடு தரவேண்டிய இன்னொரு செய்தியும் உண்டு, எழுத்து வகையான் இலக்கியம் ஆக்குவது என் தந்தையின் முதற்பணி அல்ல. கிட்டும் நேரத்தில் கிட்டும் நோட்டு புத்தகத்தில் இவற்றை அவர்கள் விளையாட்டாக செய்தார்கள் என்றே சொல்வேன். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் குரல், கருத்து, பாத்திர குண நலன், தமிழது நடை நலன் ஆங்காங்கே மெச்சும் வண்ணமிருப்பது என் தந்தையது செல்வமே ஆம். இத்தகைய நற்கதைத் தொகுப்பை தொகுப்பிலக்கணம் கொண்டு கால அடிப்படை, கருத்தடிப்படை என்றெல்லாம் கட்டித் தொகுக்கவில்லை. எழுத்தும் கருத்தும் சுதந்திரமானது. கதைக்கு எதற்கு கட்டு? பிடித்த தலைப்பைப் பிரித்து எடுத்து படித்து ரசித்து இன்புறுவீராக.

Read More...
Paperback
Paperback 155

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ஜெ மாரிமுத்து

என் பெயர் மாரிமுத்து. வயது 57. கணிதவியல் பட்டதாரி. மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள். கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறேன். இணையத்தில் வெளிவரும் தென்றல் இதழில் கதை மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். 

Read More...

Achievements

+2 more
View All