Share this book with your friends

Nan Manithan Alla / 'நான் மனிதன் அல்ல'-(தி ஏலியன்ஸ்) Thi Ealians

Author Name: Karthika Sundarraj | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

“பிரபஞ்சம்” அளவிட இயலாதது. இந்த பூமி இங்கு வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு சொந்தமானது. இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு அறிவியலை நம்மிடம் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. காற்று, ஒளி, வெப்பம் மற்றும் நீர் போன்ற இயற்கை வகையராக்களின் மாறுபட்ட உபயோகத்தின் வாயிலாகவே உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது. மனிதன் உள்பட ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய மாறுபட்ட தகவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டவை. இவை அனைத்திற்கும் பூமியே முழுமுதற் காரணமாக உள்ளது. அதே போன்றே மற்ற கிரகங்களின் தோற்றம் மற்றும் காலநிலைகள் குறித்த தகவல்களும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனைவிட அதீத அறிவு படைத்த உயிரினங்கள் வேற்றுகிரகங்களில் வாழ்ந்து வரலாம் எனும் கருத்து விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டாலும் அதனை ஆணித்தரமாக நிரூபிக்க இயலாததும் நிதர்சனமே. இந்நூலில் வேற்றுகிரகவாசிகள் குறித்த பல்வேறு தகவல்களை எனக்குக் கிடைத்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின்  கருத்துக்கள் மூலமாக முன்மொழிந்துள்ளேன். இதற்கான ஆதார நூல்களும் வலைதள முகவரிகளும் நூலின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளன.              

                 

                

Read More...
Paperback
Paperback 440

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்த்திகா சுந்தர்ரராஜ்

இந்த உலகம் முழுவதுமாக அறியப்படாத ஒன்று என்பதில் ஐயமில்லை. இன்றளவும் ஒவ்வொரு ஆய்வாளரும் இவ்வுலகில் காணக்கிடைக்காத ஏதோ ஒன்றினைத் தன் ஆய்வுகளின் வாயிலாகத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நம் பார்வையில் இருந்து இன்னும் என்னவெல்லாம் இந்த அறிவியலால் ஒழித்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் பல முறை ஆய்வாளர்கள் வெற்றியடைந்திருப்பினும் இன்னும் பல வியத்தகு விஞ்ஞானங்களிடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். உயிரியல் ஆராய்ச்சி சார்ந்த பிரிவில் பட்டம் பயின்ற ஒரு மாணவியாக விஞ்ஞான அறிவியல் சார்ந்த என்னுடைய முதல் நூலினை வெளியிடுகிறேன். 

     --கார்த்திகா சுந்தர்ராஜ் 

Read More...

Achievements