Share this book with your friends

por kuruthi / போர்க் குருதி சிறுகதைகள்

Author Name: ANAND PARTHEEBAN | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சுற்றியிருக்கும் எல்லாமுமே கதையால் எழுதப்படக் கூடியதுதான். கூலிவேலை செய்பவனின் தீர்க்கப்படாத கண்ணீர், எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் விதவைப்பெண்ணின் மறுமணம், திமிர் பிடித்த மனைவியால் பிரிக்கப்பட்டக் குழந்தை, வாங்கிய கடனால் தற்கொலை செய்த ஏழை, கால் வயிற்று பருக்கைக்காக ஏமாற்றும் பிச்சைக்காரன், நாள்தோறும் தவறாமல் எதற்கோ காத்திருப்பதுபோல் தினமும் காக்காச்சோறு வைக்கும் பாட்டி, மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் தாத்தாவின் சவரப்பெட்டி என தொடரும் ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் மறைந்துக்கிடக்கிறது ஏராளமான கண்ணீரும், மகிழ்ச்சியும், அவமானமும், ஏமாற்றமும். ஆண்டுகள் கடந்து எழுதிய கதைகள் இவை. பார்த்ததை, ரசித்ததை, அழுததை, கற்பனையில் விழுந்ததை புத்தக கோப்பையில் துளி சிந்தாமல் பத்திரப் படுத்தி இருக்கின்றேன்.

Read More...
Paperback
Paperback 155

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆனந்த பார்த்தீபன்

இன்றைய எளிய மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியிருக்கும் இந்த கதையின் ஆசிரியர் திரு.சி.ம.ஆனந்த பார்த்தீபன் அவர்கள். பொறியியல் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் தமிழ் பண்பாட்டை செல்லுமிடமெல்லாம் சொல்லும் மேடை பேச்சாளராகவும், நல்ல எழுத்தாளராகவும், தன் தமிழ் பணியை மேற்கொண்டு வருகிறார். எண்ணற்ற மாணவர்கள் நெஞ்சில் தன் தாய்மொழிப் பற்றை, தீயாய் பற்ற வைத்துக்கொண்டிருக்கும் இவரின் இந்த கதை, வாழ்தல் பற்றிய ஒரு புரிதலை சொல்லுகிறது. நாம் வாழ்க்கையில் கடந்துவந்த சில சுவடுகளையும், கசடுகளையும் ஞாபகப்படுத்துகிறது.

Read More...

Achievements