Share this book with your friends

Preliminary Biblical Hebrew grammar / விவிலிய எபிரேய அடிப்படை இலக்கணம் Volume - 1

Author Name: P. Kanagaraj | Format: Paperback | Genre : Language Studies | Other Details

“விவிலிய எபிரேய அடிப்படை இலக்கணம்” எனும் இந்நூல் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணக்கர், எபிரேய மொழியின் அடிப்படை இலக்கணத்தை கற்க உதவும் நூலாகும். விவிலிய எபிரேய இலக்கணத்தை கற்க ஆங்கில நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிற முதல் நூலாகும். இந்நூலில் இடம்பெறும் எளியப் பயிற்சிகளும் அதற்குரிய விடைகளும் ஆசிரியர் உதவி இல்லாமலும் மாணவர்கள்
பயிற்சி செய்து எளிமையாக கற்றிட உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளன. நாற்பது வகுப்புகளில் எபிரேய இலக்கண அறிமுகத்தை ஆசிரியர்கள் கற்றுத்தர
உதவும் கையேடாகும். செராம்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி பாடங்களும் பயிற்சிகளும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இறையியல் கல்வி
பயிலும் மாணவர்களுக்கு மட்டுமன்றி திருவிவிலிய ஆய்வில் ஆர்வமுடையவர், அருளுரைஞர், விவிலிய எபிரேய மொழியில் ஆர்வமுடைய எல்லோருக்கும்
பயனுள்ள வகையில் எழுதப்பட்டுள்ள முதல் தொகுதியாகும். தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இணைத்து எழுதப்பட்டுள்ள பாடங்களும், பயிற்சிகளும் அதற்குரிய விடைகளும், புதியச் சொற்களும் எபிரேய இலக்கணத்தை பிழையற கற்க உதவும் சிறப்பான நூலாக மாற்றியிருக்கிறது.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பெ. கனகராஜ்

இந்நூலின் ஆசிரியர் அருள்பணி.பெ.கனகராஜ், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி கிராமத்தைச்சேர்ந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைகணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலை பட்டம் பெற்றவர். தென்னிந்தியத் திருச்சபை, சென்னைப் பேராயத்தால் 2013 ஆம் ஆண்டு ஆயர் திருப்பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டு, மதுரை அரசரடி தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நான்கு ஆண்டு (2014-2018) இறையியல் கல்வி பயின்று, கொல்கத்தாவில் உள்ள செராம்பூர் பல்கலைக்கழகத்தின் வழியாக இளந்தேவியல் பட்டம் பெற்றவர். தனது இறையியல் படிப்பில் செராம்பூர் பல்கலைக்கழக அளவில் முதலிடமும், சமயப் பாடப்பிரிவில் முதலிடமும் பெற்றவர். விவிலிய எபிரேய மொழி மட்டுமன்று விவிலிய கிரேக்க மொழியிலும் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இந்நூலுக்கு முன்பு "இயற்கை பேசினால்" என்ற நூலையும் எழுதியுள்ளார். தற்போது தென்னிந்தியத் திருச்சபை, சென்னைப் பேராயத்தில் ஆயராக அருட்பொழிவுப் பெற்றுத் திருப்பணியாற்றுகிறார்.

Read More...

Achievements

+5 more
View All