10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

Puliyampattiyil Irunthu America Varai - 'Padiththa Kaalam' / புளியம்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை - 'படித்த காலம்'

Author Name: Kamraj Sundram | Format: Paperback | Genre : Poetry | Other Details

புளியம்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை - ‘படித்த காலம்’

இன்றைய சூழ்நிலையில், பணம், நாம் வாழத் தேவையான, மற்றும் விரும்பும் பொருள்களையும் சேவைகளையும் பெற ஒரு இன்றிமையாத கருவியாக இருக்கிறது. அதனினும் மேலாக,  நமது,  'தன்மை' -  குணம் - பண்பு - நமக்கும் பிறருக்கும் உள்ள உறவையும், அந்த உறவின் வழி நாம் பெறுவதையும், தருவதையும் அவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட உறவின் ஆழத்தையும் தீர்மானிக்கிறது, அல்லவா? இந்தத் தன்மையை, ஆங்கிலத்தில் 'கேரக்டர்,' - 'CHARACTER' என்று சொல்லுவார்கள்.

அனுபவங்கள் நமது  'தன்மையைச்' செம்மையாக்க வழி வகுக்கின்றன.  அனுபவங்களின் வழி விளைந்த ஆழ்ந்த உணர்வுகளோடு வளர்ந்த அறிவை நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து, வாழ்க்கையில் அழகு, இரசனை, அறிவு, மனவளம், முடிந்தவரை பொருள்வளம், அனைத்தும் அமைகின்றன. 

இந்த அனுபவங்கள் கவிதையாக மலரும்படி அமைந்தது என் பாக்கியம். இவற்றின் ஒரு தொகுப்பே ‘புளியம்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை’ - கவிதையான உணர்வுகளும் அவற்றின் பின் நின்ற நினைவுகளும், கதைகளும். இந்த முதற்தொகுப்பு, 'படித்த காலம்,' நான் கல்லூரிப்  படிப்பினை முடிக்கும் வரை பதிந்த நினைவுகளை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நினைவுகளையும் இது வருடும் என்று நம்புகிறேன்.

இந்தத் தொகுப்பில் காதல் உண்டு, கண்ணியம் உண்டு, கடமை உண்டு, கற்பனை உண்டு, இயற்கையின் இரசிப்பு உண்டு, வறுமை உண்டு, வளம் உண்டு, நட்பு உண்டு.

இந்தக் கவிதைகளும் நினைவுகளும் கதைகளும்  உங்களைத் தொடும் தென்றலாகவும், சிந்திக்கத் தூண்டும் கருவியாகவும் அமையும் என்று நம்புகிறேன். 

நன்றியுடன், அன்புடன்,
காம்ராஜ் சுந்தரம்.

Read More...
Paperback
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காம்ராஜ் சுந்தரம்

காம்ராஜ் சுந்தரம்

தமிழ்நாட்டில், அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தில் வளர்ந்தவர், காம்ராஜ் சுந்தரம். அவர் சிறு வயதில் இருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் தனது மொழிவளத்தை உழைத்து வளர்த்தார்.  

இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிலும்  இங்கிலாந்திலும் சிங்கப்பூரிலும் பணி புரிந்த அவர் மற்றபிற நாடுகளிலும் பயணம் செய்தவர். 

Sarvah League என்னும் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் கலாச்சாரம் - பண்பாடு சார்ந்த பயணங்கள், குறும்படங்கள், மற்றும் நூட்கள் ஆகியவற்றை, ஆங்கிலம், தமிழ் வழி, மக்களுக்குக் கொண்டு செல்லும்  பணியில் ஈடுபட்டுள்ளார்.

நமது பாரதத்தின் பண்பாட்டையும், ஆன்மீகச் சிந்தனையையும், எல்லா நாடுகளிலும் பெற்ற அனுபவங்களையும், தனது எழுத்தின் மூலமும் பேச்சின் மூலமும் பகிர்ந்து வரும் காம்ராஜ் சுந்தரம், உலகையும் தன்னையும் ஆழமாய் அறியக் கற்றுக் கொடுத்த சக மனிதர்களுக்குத் தனது படைப்புகளை அர்ப்பணிக்கிறார்.

அவரைப் பற்றியும், அவரது நிறுவனத்தைப் பற்றியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.kamrajsundram.com

www.sarvahleague.com

Read More...

Achievements

+4 more
View All