Share this book with your friends

Puyalile Oru Thoani (Novel) / புயலிலே ஒரு தோணி நாவல்

Author Name: P. Singaram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சில அரிய தகவல் கட்டுரைகளுடன்

ப.சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய இரு நாவல்களும் சர்வதேச நிலையில் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்க்கையைப் பதிவாக்கியதுடன், நுட்பமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன. அவை புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை குறித்த நுண்ணிய விசாரணைகளாகவும் விளங்குகின்றன.

தமிழகத்தின் வறண்ட நிலப்பகுதியான புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாட்டங்களில் இருந்து தெற்காசிய நாடுகளுக்குப் பொருள் ஈட்டுவதற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் குடும்பம், ஊர் என விரிந்திடும் நாவல் பரப்பில் நல்லதும் கெட்டதுமான மனிதர்களின் இருப்புப் பதிவாகியுள்ளது. போன நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை, திருப்பத்தூர், செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்தவர்களின் மேன்மைகளும் கசடுகளும் புனைவாக வெளியாகியுள்ளன. சக மனிதர்களுக்கிடையிலான உறவு பற்றிய விவரிப்பு, சூழல் குறித்த நுண் அவதானிப்பாகியுள்ளது. மனித இயல்பை நுட்பமாக விவரித்துள்ள ப.சிங்காரம், வெறுமனே காட்சிப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டவர் அல்லர். உச்சம், வீழ்ச்சி, உன்னதம், கசடு என இருவேறு எதிரெதிர் முனைகளில் வாழ்கின்ற மனிதர்கள், எப்பொழுதும் மேன்மையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பது புனைவின் வழியே ப.சிங்காரம் உணர்த்தும் தகவலாகும்.

Read More...
Paperback
Paperback 425

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப. சிங்காரம்

ப.சிங்காரம் எழுதியது "கடலுக்கு அப்பால்", "புயலிலே ஒரு தோணி" என இரண்டு நாவல்கள் தான். ஆனால், அந்த இரு நாவல்களும் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்பவை.
எழுதிய போது பெரிதாகப் போற்றப்படாமல் இருந்தாலும், இப்போது வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்படுபவை அவை. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர். கலைஞர்களின் கலைஞர் என இப்போது இலக்கியக் கூட்டங்களில் கொண்டாடப்படுகிறார்.

Read More...

Achievements

+15 more
View All