Share this book with your friends

Rettai Nilavu / ரெட்டை நிலவு

Author Name: Min Mini | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

இக்கதை LGBTQ பற்றியது.. ஓரினச்சேர்க்கையாளர்களின் கலாச்சாரம் பெரிய அளவில் நாம் வாழ்கிற சமுதாயத்தில் நடைமுறையில் இல்லை என்றாலும் அவர்கள் வாழ்வது உண்மை தான்.. அவர்களை பற்றிய விழிப்புணர்வை கொடுக்கவில்லை என்றாலும் அவர்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய முயலுகிறேன்.. காட்சிகள் முகம் சுழிக்கும் வகையில் நிச்சயமாக இல்லை... ஆனால் எழுத வேண்டிய இடத்தில் சில காட்சிகளை தூவ வேண்டியுள்ளது.. இதுவரை ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கும் இனி ஊக்கப்படுத்தப் போகும் உறவுகளுக்கும் என் நன்றிகள்..

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மின்மினி

செங்கதிரோனும், குளிர்நிலவும் கோலோச்சும் இவ்வையகத்தில் தனக்கான வளையில் ‘நானே ராஜா... நானே மந்திரி...’ என சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுபூச்சியின் பெயர்தாங்கி எழுதிக் கொண்டிருக்கும் இளைஞி – மின்மினி.

நிஜத்தில் முதுகலைப் பட்டதாரியாக இருப்பினும் எழுத்துலகில் இப்போதும் கின்டர்கார்டன் தாண்டாதவள். ஒவ்வொரு படியிலும் ஏதோவொன்றை கற்றுக் கொண்டு புதுக்கோணங்களை கதைகள் வாயிலாக எடுத்துரைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 

இதுவரை எட்டு கதைகளை எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டவை. அனைத்துமே அமேசான் கிண்டிலில் மின்னூலாக வாசிக்கக் கிடைக்கின்றன.

“ரெட்டை நிலவு” அச்சுப்புத்தகமாக வெளிவரும் என் மூன்றாவது கதை. இதற்கு முன் “காதல் தாண்டவம்”, “விஜயசாலி” ஆகியவை அச்சுப்புத்தகமாக வெளியாகியிருக்கின்றன. 

ஆன்லைன் செயலில் எழுதத் தொடங்கி, இப்போது சொந்தத் தளத்திலும் எல்லையை விஸ்தரித்துள்ளேன். எனது கதைகளை உடனுக்குடன் வாசித்து மகிழ, www.kkruthitha.blogspot.com என்னும் தளத்தை பார்வையிடலாம். எனது படைப்புகளை குறித்த உங்களது கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. என் மின்னஞ்சல் முகவரி : minminishines99@gmail.com  

Read More...

Achievements