Share this book with your friends

Raghavendra Swamigal Tiruvilayadar Puranam / இராகவேந்திர சுவாமிகள் திருவிளையாடற் புராணம்

Author Name: Sai Adimai | Format: Paperback | Genre : Poetry | Other Details

இராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை மிகவும் அசாதாரணமானது, அற்புதமானது. அவரது அசாதாரணமான ஞானமும், அதீதக் குடும்பப்பற்றும், வறுமையும், குருவின் இச்சையும், கலைவாணியின் ஆணையும், துறவறமேற்றலும், அதன்பின் ஆற்றிய பல்வேறு அதிசயச் செயல்களும், இறுதியாகச் சமாதி ஏற்றதும் படிக்கப் படிக்கத் திகட்டாத நிகழ்ச்சிகளாகும். இவற்றையெல்லாம் தொகுத்துப் பாடலாக எழுத ஒரு சிறு முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. மாமுனிவர் பிறந்தது முதல் சமாதியேற்றது வரை நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே இதில் காணலாம். சமாதியேற்றது முதல் இன்று வரை இன்னமும் அற்புதங்கள் செய்து வருகிறார். எல்லாவற்றையும் தொகுத்து எழுதுவதென்பது மிகவும் இயலாத செயலாகும்.

Read More...
Paperback
Paperback 685

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாயி அடிமை

தமிழ்நாட்டின்  நாகரீகம் அறியாத சிறு கிராமமொன்றில் இளம் பருவத்தைக் கழித்துப், பட்டமேற்படிப்பு படித்தும் வேலையின்றி இரண்டாண்டுகள் தவித்துப், பெற்றோருக்குச் சுமையாக இருந்து, பிறந்தற்கு மிகவும் வருந்தி, நிர்க்கதியாய் இருந்த காலத்தில் காஞ்சி மகாசுவாமிகளின் ஆசியால் வேலை கிடைக்கப், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை முடிந்தவரை செய்ய, மகான்கள் மற்றும் இறையருளேக் காரணமாகும். 

அரசு சார்ந்த குழுமம் (PSU)  ஒன்றில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்பு, மனிதருள் தெய்வமாக வாழ்ந்து, பலவாறான அற்புதங்கள் ஆற்றி, அடியவருக்கு  அநேக விதத்தில் பேருதவி புரிந்து, சமாதியேற்ற உத்தம புருடர்களின் வரலாற்றைப்  பாடலாக எழுத உத்வேகம் பெற்று, அதன் விளைவாக இராகவேந்திர சுவாமிகளின் வரலாற்றை விவரிக்க எடுத்த ஒரு சிறிய முயற்சிதான் இந்நூல். சிரடி மகான் ஆற்றிய அற்புதங்கள் சிலவற்றைப் பாடலாக “சிரடி சாயி திருவிளையாடற் புராணம்” (கிரி டிரேடிங் ஏஜென்சி பிரசுரம்) என்னும் புத்தகத்திலும்,  காஞ்சி மகாசுவாமி நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றைத் தொகுத்துப் பாடலாக “காஞ்சி மகாசுவாமி திருவிளையாடற் புராணம்” (Notion Press, சென்னை பிரசுரம்) என்னும் புத்தகத்திலும் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்நூற்களையும் படித்து மகான்களின் ஆசிகளுக்குப் பாத்திரமாக ஆகுமாறு ஆசிரியர் வேண்டுகிறார். இராகவேந்திரரின் அனுக்கிரகம் பெற இச்சித்துச், சங்கல்ப சேவை புரிந்து, நூலாசிரியர் கண்கூடாகப் பயன் பெற்றிருக்கிறார் . ஆகவே, இந்நூலைப் படிப்பவர்களையும் இராகவேந்திரர் மீது பத்தி செய்து பலன் பெறுமாறு வேண்டுகிறார். 

இதை நம்பிக்கையுடன் படிக்கும் அடியார் அனைவருக்கும் இராகவேந்திர சுவாமிகள்  பதினாறு வகைச் செல்வங்களையும் அருளுமாறு நூலாசிரியர் மனப்பூர்வமாக வேண்டுகிறார்.

புத்த்க விற்பனையால் கிடைக்கும் தொகையெல்லாம் மந்திராலயம் ஸ்ரீ இராகவேந்திர சுவாமிகள் மடத்திற்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

தமிழ்கூறும் நல்லுலகு இப்புத்தகத்தையும், ஆசிரியரையும் ஆதரித்தால், இதுபோன்ற  பல நூற்கள் எழுதிப் பிரசுரிக்க ஏதுவாகும்.

இராகவேந்திரர் பாதமே சரணம், இராகவேந்திரர் பாதமே துணை! 

Read More...

Achievements