Share this book with your friends

KAVIYAGAM / கவியகம் கவிதைகள்

Author Name: Velliyangataan | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஏமாற்றம்
அந்த நல்ல நாளுக்காகவே - கவிஞன்
ஆண்டிரண்டும் காத்தி ருந்தனன்
மந்த மாரு தத்தின் வரவெதிர் - பார்த்து
மனது மாழ்கும் மாங்கு யிலெனவே!

காத்த நாளும் வந்து, ஒர்ந்தது - கவிஞன்
கவலை சற்றுக் கழிய நேர்ந்தது!
பூத்த கொம்பு போன்று புத்தகம் - அழகு
பொலிய நன்கு புதுக்கி யாச்சுது!

மங்கு மந்த மாலை வேளையில் - இனிய
மலர்ம ணங்க மழ்ந்த காற்றினில்
தங்கள் மேனி தளர்ச்சி நீங்கவே - செய்த
தவமு மின்றுதந்த தென்னவே!

நீல வானில் மின்ன லாமென - அருகில்
நேச முள்ள மனைவி நிற்கவே,
மாலை, மஞ்சள், குங்கு மத்தோடும் - கவிஞன்
மனைமுன் காத்து மகிழ்ந்தி ருந்தனன்.

நாளும் போது மாக ஊரினர் - ஒளி
நல்வி ளக்கு நயந்து நல்கவே
ஆறாம் அருமைத் தெய்வம் வந்தது - அன்பொ
டாசி கூறி யவலம் நீக்கவே!
அடியெடுத்து வைக்கு மிடமெலாம் - மலர்கள்
அள்ளி யள்ளிச் சொரியத் தமனியக்
கொடிய சைந்த தென்னத் தெய்வமும் - கவிஞர்
குடிலைத் தேடிக் கொண்டு வந்தது!

இந்த வுபூரில் கவிஞ னில்லமும் - இருக்கும்
இடமெ தென்று தெய்வம் வினவவும்
தந்தி ரத்தில் காசு சேர்ப்பவன் - தோன்றித்
தனது வீட்டுத் தடத்தைக் காட்டினான்!

சிலையைப் போல்பு தைந்து நின்றனன் - கவிஞன்
'சைய்வ தென்ன வென்ற திகைப் பொடும்.
'கவிஞன் வாழ்க வென்னுங் கூக்குரல் அங்கு
காது செவிடு படவொ லித்ததே!

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் வெள்ளியங்காட்டான்

வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர்.

Read More...

Achievements

+15 more
View All