Share this book with your friends

Seema Uliyum Kai Vaalum / சீமஉளியும் கைவாளும்

Author Name: M. Baskaran | Format: Paperback | Genre : Poetry | Other Details

“மேலும், மேலும் படிக்க தூண்டும் புத்தகங்களுக்கு நடுவில், இந்த படைப்புகள் உங்களை எழுத தூண்டும்”.

 

அழகியல், அன்பு, நட்பு, உறவுகள், இயற்கை, மகிழ்ச்சி மற்றும் சமூக யதார்த்தங்களை பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பே  இந்த “சீமஉளியும் கைவாளும்”. நாள்தோறும் நம்மோடு  ஒட்டி உறவாடிய, நாம் கவனிக்கத்தவறிய, எதார்த்த உணர்ச்சிகள், ஒரு சாமானிய மனிதனின் பேச்சுவழக்கில் தொடுக்கப்பட்டுள்ளது. இது வாசிப்போரை எழுத்துக்களுடன் எளிதில் இணைத்துக்கொள்ளவும், மேலும் தங்கள் பிரதிபலிப்புகளை காணவும் துணைசெய்யும்.

 

எழுதும் பழக்கம் எழுதுவோரின் எண்ணங்களை ஆழப்படுத்தவும், தீவிர உணர்வுகளை உருவாக்கவும் உதவும், அதையும் தாண்டி உங்களுக்குள்  அடையுண்டு மூச்சுத்திணறலுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கும் கதைக்களம் கொடுக்கும். எல்லா நேரங்களிலும் வேற்றுலக தலைப்புகள் தேவைப்படுவதில்லை, உங்கள் எண்ணங்களை எழுதி அவற்றை காப்பகப்படுத்த முயலுங்கள். யாரறிவார்?, ஒரு நாள், உங்கள் பிள்ளைகள் அதைக்கொண்டு  ஒரு புத்தகத்தை அச்சிடலாம் அதிலிருந்து, உங்கள் பேரப்பிள்ளைகளும்  கொள்ளுபேரப்பிள்ளைகளும் உங்கள் அனுபவங்களை பார்த்து, படித்து, ரசித்து, ருசித்து, பின்பு அதை பகிர்ந்து மகிழலாம்!

Read More...
Paperback
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மு. பாஸ்கரன்

மு.பாஸ்கரன் அவர்கள், தனது இரண்டாவது மகனுடன் சென்னையில் வாழ்ந்துவருகிறார். தமிழ் இலக்கியங்கள் மற்றும் கவிதைகள் மீதான அவருடைய ஆர்வமென்பது, அவரின் சிறு வயதில், தனது சொந்த கிராமமான வடகாலில் (சீர்காழி) தனது தாத்தா நடேசன் அவர்களால் விதைக்கப்பட்டது. தனது தாத்தா கூறிய எண்ணிலடங்கா  சங்கஇலக்கிய பாடல்களையும், கதைகளையும் இன்றும் அவரால் வரிபிரளாமல் நினைவுக்கூர முடிகிறது. இவைமட்டுமன்றி  அவற்றை சமகால நிகழ்வுகள் மற்றும் தன்னை சுற்றியுள்ள மனிதர்களுடனும் இணைத்து பாடுகின்ற கவிகள் வாசிப்போரை மெய்சிலிர்க்கவைக்கும். தனது பள்ளிப் பருவத்தில் பாடநூல்களில் எழுதத்துவங்கி தற்போது முகநூலில் எழுதிக்கொண்டுஇருக்கிறார்.  

 

திருச்சி, பாரத மிகு மின் நிலையம் (BHEL) மற்றும் அதன் தொழிற்சங்கத்தில் பணிபுரிந்த காலத்தில், தன்னை சுற்றி  எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டத்தை, அவரது கவிதைகள் மூலம், தன்வசம் ஈர்க்கும்  திறன் பெற்றிருந்தார். அவரது படைப்புகள் அனைத்துமே அவரை சுற்றியிருந்தவர்களைச் சார்ந்தும் சமூகம் சார்ந்ததுமாகவே இருந்து வந்துள்ளது. அவரின் 2000த்திற்கும் மேற்பட்ட முகநூல் நண்பர்களில் பெரும்பான்மையானோர் அவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்களே. இத்தகைய ருசிகரம் மிகுந்த படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளின் தொகுப்பே இந்த “சீமஉளியும் கைவாளும்” 

Read More...

Achievements

+1 more
View All