Share this book with your friends

THIRUVILAYADAR PURANAM / திருவிளையாடற் புராணம்

Author Name: R. Seenivasan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

திருவிளையாடற் புராணம் திரைப்படத்தில் ஒரு சில கதைகள் வந்து மக்களைக் கவர்ந்துள்ளன. இதில் மொத்தம் உள்ளவை அறுபத்துநான்கு கதைகள் ; அவற்றை முழுவதும் இவ்உரை நடையில் தரப்பட்டுள்ளன.

இதில் உள்ள கதைகள் பல்வகையின; இந்திரன் வந்து இக்கோயிலைத் தோற்றுவித்தான். அவனைத் தொடர்ந்து அவன் ஏறியிருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானை மண்ணில் பிறந்து கோயிற் பணி செய்தது. பின் பாண்டியன் காட்டுவழியில் கிடந்த சிவலிங்கத்தைக் கண்டு கோயில் எழுப்பினான் என்று கதை தொடர்கிறது.

பாண்டிய அரசர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து அவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களை எல்லாம் சோமசுந்தரர் தீர்த்து வைக்கிறார். தவறு செய்கின்றவர்கள் மண்ணில் பிறந்து மதுரையில் பொற்றாமரைக் குளத்தில் முழுகிக் கோயிலை வழிபட்டு விமோசனம் பெறுகின்றனர்.

உமையே தடாதகைப் பிராட்டியராக மலையத்துவச பாண்டியன் செய்த வேள்வியில் பிறந்து ஆட்சிக்கு உரிமை பெறுகிறாள். சோமசுந்தரரை மணந்து ஆட்சி அவரிடம் தரப்படுகிறது. இறைவனே ஆட்சி செய்த பெருமையைப் பாண்டி நாடு பெறுகிறது. பெண்ணரசி ஆட்சி செய்யும் பெருமையையும் பெறுகிறது. எவ்வகையிலும் பெண் ஆணுக்கு இளைத்தவர் அல்ல என்பது உணர்த்தப்படுகிறது.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரா. சீனிவாசன்

டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர்.அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது.

1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.

Read More...

Achievements

+15 more
View All