Share this book with your friends

VIJAYALAKSHMI PANDIT ( Biography) / விஜயலக்ஷ்மி பண்டிட் வாழ்க்கை வரலாறு

Author Name: Vallikannan | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

1. விஜயலக்ஷ்மியின் வாழ்க்கை வரலாறு.

சுதந்திரப் போரில் தீவிரப் பங்கு பெற்று, மூன்று தடவைகள் சிறை வாழ்க்கை அனுபவித்தாள் விஜயலக்ஷ்மி, இந்தியாவிலேயே முதல் பெண் மந்திரி என்ற அந்தஸ்து அவளுக்குக் கிட்டியது, ஐக்கிய மாகாண மந்திரி சபையில் அவள் இடம் பெற்றபோது, சுதந்திர இந்தியாவின் அயல் நாட்டு ஸ்தானிகராக ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் பணி புரியும் பேறு அவளுக்குக் கிட்டியது. உலகத்திலேயே ஒரு பெண் அடையக்கூடிய மிக உயர்ந்த ஸ்தானம்-இதுவரை எந்தப் பெண்னும் பெற்றிராத தனிப்பெரும் கெளரவம்-என்று போற்றும் வகையில் அவள் ‘ஐக்கியகாடுகள் சபை’யின் தலைமைப் பதவியை அடைந்து விளங்குகிறாள்.

நேரு குடும்பத்தின் வரலாறு இந்திய சரித்திரத்தில் சிறப்பான இடம் பெறும் ஓர் அத்தியாயமாகும். தியாகம், வீரம், தன்னிகரில்லாத் தனிப் பெரும் சேவை, நாட்டுப்பற்று முதலியவற்றின் கதம்பம் நேரு குடும்பக் கதை. அம்மலர்ச் செடியினூடே தகதகக்கும் பொன் இவை போன்றது விஜயலக்ஷ்மியின் வாழ்க்கை வரலாறு.

2. நம் நேரு - வாழ்க்கை வரலாறு

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.

Read More...

Achievements

+15 more
View All