Share this book with your friends

MALAI NAATTU MAKKAL PAADALGAL / மலை நாட்டு மக்கள் பாடல்கள் (ஈழ நாட்டுப்புறப் பாடல்கள்)

Author Name: C.v. Velupillai | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஆரிரரோ ஆரிரரோ –கண்ணே
ஆரிரரோ ஆரிராரோ 

ராமர் பசுவணைய 
லெட்சுமனார் பால் கறக்க சீதையம்மா எழுந்திருச்சி 
தீ மூட்டி பால் காச்சி 
தங்க குவளையிலே 
தாதிமார் பால் குடுக்க 
வந்த அருமணியே 

முத்தாலே ஆபரணம் 
முடிப்பாரே ஒன் மாமன் பட்டெடுத்து தொட்டி கட்டி 
பசும் பொன்னெடுத்து 
பொட்டு வைப்பார் 

செம்பொன் எழுத்தாணி சிவகெங்கை வில்லோலை வில்லோலை வாசிக்க 
வீமனா வந்தவரே 

குளிச்சு முழுகி 
குளத்தருகே போகையிலே குருநாதர் பாத்து 
குடுத்த குழந்தையல்லோ 

கண்ணி தவமிருந்து 
கண்டெடுத்த ரத்தினத்தே 
சீதை தவமிருந்து 
செல்வத்தை கண்டெடுத்தேன் 

சங்கு முழங்குதையா 
சங்கரனார் கோயிலிலே 
நீதான் உறங்காயோ 
உன் தாயார் மடிமேலே

செம்பொன் சிலை எழுதி 
செல்லாத நாடெழுதி 
செல்லாத நாட்டை நீ 
செழிக்க பிறந்தாயோ 

அழுதால் முகம் சோம்பும் அன்னமுதே கண் வளரும் சிரித்தால் சிலம்புதிரும் 
செல்வமே வாய் திறந்தால் 

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸி.வி.வேலுப்பிள்ளை

சி. வி. வேலுப்பிள்ளை

சி. வி. வேலுப்பிள்ளை (செப்டம்பர் 14, 1914 - நவம்பர் 19, 1984) இலங்கை மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, கவிஞர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்தவர். கவிதைகள், நாவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள இவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக 1947 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.

சி. வி. வேலுப்பிள்ளை

பிறப்பு

செப்டம்பர் 14, 1914
வட்டகொடை மடக்கொம்பரை தோட்டத்தில்

இறப்பு

நவம்பர் 19, 1984 (அகவை 70)

தேசியம்

இலங்கைத் தமிழர்

அறியப்படுவது

கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கவாதி, பாராளுமன்ற உறுப்பினர்,ஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

வேலுப்பிள்ளை இலங்கையின் மலையகத்தில் மடக்கொம்பரையில் பெரிய கங்காணிக்கு மகனாக பிறந்தார். அவர் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றார். சேக்ஸ்பியர் முதலியோரின் ஆக்கங்களை இவர் படித்துத் தேறினார். ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்துலகில்

இலங்கை வானொலியான வொயிஸ் ஒஃப் லங்கா (Voice of Lanka) அவரது Tea Pluckers என்ற ஆங்கிலக் கவிதையை அறிமுகம் செய்தது. அவரது திறமையை வியந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் தனது "காங்கிரஸ் நியூஸ்" என்ற ஏட்டின் ஆசிரியராக அமர்த்திக் கொண்டார்.

கதை என்னும் இலக்கிய இதழ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி என்ற மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்து செயல்பட்டார்.அந்நாளில் தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் க. கைலாசபதி மலையகப் படைப்பாளிகளை ஊக்குவித்து மலையக இலக்கியங்களை வெளியிட்டு வந்தார். அவர் சி. வி. வேலுப்பிள்ளையின் நிறைய படைப்புகளை வெளிக்கொணர்ந்தார். பொன். கிருஷ்ணசாமி இவரது ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்து தினகரனில் வெளியிட்டார்.

1934 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூர் இலங்கை வந்­தி­ருந்த போது அவரை 1934 மே 14 இல் கொழும்பில் சந்தித்து தன்னுடைய விஸ்மாஜினி என்ற இசை நாடக நூலை வழங்கி ஆசி பெற்றார்.

1961 இல் வீரகேசரியில் "காலம் பதில் சொல்லட்டும், சாக்குக்காரன் என்ற இரு சிறுகதைகளை இவர் எழுதினார்.

வேலுப்பிள்ளை சிங்களப் பெண் ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியும் சில கவிதைகளை எழுதியுள்ளார்.

Read More...

Achievements

+15 more
View All