Share this book with your friends

MANICKAVASAGAR / மாணிக்கவாசகர்

Author Name: Na. Subbureddiyar | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

 திருவாதவூரில் மானமங்கலத்தார் என்று வழங்கப்பெறும் தொன்மை வாய்ந்த ஆமாத்தியர் வேதியர் குலத்தில் வந்தவர் சம்புபாதாசிருதயர்; இவர் வாழ்க்கைத் துணைவியார் சிவஞானவதியார். இப்பெயர்களைத் திருப் பெருந்துறைப் புராணத்தால் அறிய முடிகின்றது. இவர்களின் தவப்பயனாலும் இறையருளாலும் ஒரு மகன் பிறக்கின்றார். இவர் பிறப்பைப் பற்றிப் பரஞ்சோதியார்,

ஆயவளம் பதியதனின்
     அமாத்தியரில் அருமறையின் 
தூயசிவா கமநெறியின்
     துறைவிளங்க வஞ்சனையான் 
மாயன்இடும் புத்தஇருள்
     உடைந்தோட வங்தொருவர் 
சேயஇளம் பரிதியெனச்
     சிவனருளால் அவதரித்தார்.” 2

என்று கூறுவர். வேத நெறியும் சிவாகம நெறியும் விளங்கு வதற்காகவன்றி புறச்சமயமாகிய புத்த இருள் சிதறி ஒடுவதற்காகவும் இப்பிள்ளை அவதரித்திருப்பதாகச் செப்பி இருப்பது காண்க. இப்பிள்ளைக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவாதவூரர்

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ந. சுப்புரெட்டியார்

ந. சுப்பு ரெட்டியார் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், பெரகம்பி என்ற ஊரில் எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். திருச்சி சூசையப்பர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் 1960-ல் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றினார்.

Read More...

Achievements

+15 more
View All