Share this book with your friends

OTHTHAI VEEDU & PUTHAI MAN (Novels) / ஒத்தை வீடு புதை மண் குறுநாவல்கள்

Author Name: Su. Samuthiram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"பயர்" என்ற திரைப்படம், வந்தாலும் வந்தது. அதற்குப் பிறகு, ஆண் பெண் - ஆகிய இருபாலரின் ஓரினச்சேர்க்கை , நியாயப் படுத்தப்படுகிறது. இது, ஒரு தவறான அணுகுமுறை என்று, நான் கருதியபோது. இதற்கு மாற்றாக, ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். நடுவண் அரசின் தகவல் துறை இணை இயக்குநராக பணியாற்றியபோது, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதற்காக, பல ஓரினச்சேர்க்கை இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். இவர்கள், எப்படி இந்த பாலியல் திரிபுக்கு உட்பட்டார்கள் அல்லது உட்படுத்தப் பட்டார்கள் என்பதை, நேரடியாகப் பேசித் தெரிந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் எழுந்ததுதான், "புதை மண்." ஒரு இளைஞன், தெரிவித்த அவனது அனுபவத்தைச் சுற்றியே, இந்தப் படைப்பை, சுழல விட்டிருக்கிறேன்.

இந்த இரண்டு கருப்பொருட்களிலும், ஆபாசம் தொனிப்பது இயல்பு. ஆனாலும், சமூகப் பொறுப்பாளன் என்ற முறையில், கத்திமேல் நடப்பது போலவே, சில விவகாரங்களை, இலைமறைவு காய்மறைவாய் எழுதி இருக்கிறேன். அப்படியே ஆங்காங்கே தவர்க்க முடியாத படி, ஒரு சில வார்த்தைகள், வெளிப்பட்டால், அவை, ஒரு டாக்டர், தனது நோயாளியை, உடல் திறந்தும், மனம் திறந்தும் பார்ப்பது போன்றது.

கத்தியும் "கத்தி"யும்.....
கத்திமேல் நடந்தாலும், இறுதியில், "கத்தி"யும் சொல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இந்த இரண்டு படைப்புகளிலும், இறுதியாக வரும் சிகிச்சை முறை, கட்டுரைத்தன்மை வாய்ந்தது போல் தோன்றலாம் பிரச்சாரவாடை என்றும் பேசப்படலாம். என்றாலும், இது தவிர்க்க முடியாதது

இவற்றைப் படிக்கும் வாசகருக்கு, இந்த இரு பிரச்சினைகளுக்கும், முடிவு கட்டலாம் என்ற ஒரு நம்பிக்கை உணர்வை, தோற்றுவிக்கவேண்டும். அதற்கு, யதார்த்தமான சிகிச்சை முறைகளை, உள்ளது உள்ளபடியே கொடுக்க வேண்டியது. அவசியமாகிவிட்டது. 

Read More...
Paperback
Paperback 399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சு. சமுத்திரம்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.

Read More...

Achievements

+15 more
View All