Share this book with your friends

THIRUKKURAL MANAKUDAVARURAI ( Arathupaal) / திருக்குறள் மணக்குடவருரை அறத்துப்பால்

Author Name: V. O. Chidambaram Pillai ( Publisher) | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

சீரெல்லாம் நிறைந்துவிளங்கும் செந்தமிழ் நூல்களிற் சிறந்தது, “திருக்குறள்” என்று வழங்கும் வள்ளுவர் நூல். “தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர், பரிமே லழகர் பருதி-திருமலையர், மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற், கெல்லை உரையெழுதினோர்.” அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சிலவருடங்களுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டு மென்னும் அவா எனக்கு உண்டாயிற்று. அது முதல், தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன்.

அம்முயற்சியின் பயனாக எனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவ ருரைப்பிரதி ஒன்று. அது வள்ளுவர் கருத்துக்களைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ்நடையில் எழுதப்பெற்றதாகவும் தோன்றிற்று. அதுபற்றி, யான் அதனை அச்சிட்டு வெளிப்படுத்தக் கருதிச் சென்னை அரசாட்சியாரது கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள மணக்குடவ ருரைப்பிரதியோடு ஒத்துப்பார்த்தேன். அரசாட்சிப் புத்தகசாலைப்பிரதியில் அதிகாரப் பெயரும் முறையும் பரிமேலழகருரையைப் பின்பற்றியிருக்கின்றன. அன்றியும், அதில் சில குறள்களின் மூலமும் உரையும் சிதைந்தும் குறைந்து மிருக்கின்றன.

பின்னர், மஹாமஹோபாத்தியாயர் மகா-௱-எ-ஸ்ரீ, உ. வே. சாமிநாதையரவர்களிடத்துள்ள மணக்குடவருரைப்பிரதியைத் தருவித்துப் பார்த்தேன். அது, மேற்கூறிய அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியினின்று பிரதி செய்யப்பட்டதாகத் தெரிந்தது. 

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பதிப்பு: வ.உ.சிதம்பரம் பிள்ளை

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936). ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

Read More...

Achievements

+15 more
View All