Share this book with your friends

KUMANA VALLAL / குமண வள்ளல்

Author Name: Ki. Va. Jaganathan | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

குமணனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் புலவர்கள் இருவர். பெருஞ்சித்திரனார் என்பவர் ஒருவர்; மற்றொருவர் பெருந்தலைச் சாத்தனார். அவர்கள் வாழ்க்கையும் குமணனுடைய வாழ்க்கையும் பிரிவின்றி இணைந்திருக்கின்றன. அவர்கள் வரலாற்றை வேறாகவும் அவன் வரலாற்றை வேறாகவும் காணமுடியாது. ஆதலின், இப்புத்தகத்தில் புலவர் வரலாறும் குமணன் வாலாறும் இணைந்தே விரிவாக அமைந்திருக்கின்றன.

கிடைத்த செய்திகளை அக்கால நிலை, மன்னர் இயல்பு, மக்கள் இயல்பு, புலவர் நிலை, மக்கள் மனநிலை என்பவற்றோடு வைத்து நோக்கி, இணைப்பில்லாத இடங்களை அந்த இயல்புகளுக்கும் நிலைகளுக்கும் ஒத்த நிகழ்ச்சிகளாலும் உரையாடலாலும் நிரப்பி இந்த வரலாற்றை எழுதினேன்.

பழங்காலத்துப் புலவரும் புரவலரும் ஒன்றிப் பழகிய உறவைச் சிறப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். அந்த உறவுதானே நாட்டின் பண்பை உயர்த்த வழிகோலுவது?

 கி. வா. ஜகந்நாதன்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கி. வா. ஜகந்நாதன்

கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

Read More...

Achievements

+15 more
View All