
Book Description
இப்புத்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு நில அளவுகளை கொண்ட 3BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 860 சதுர அடி முதல் 5800 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசை வீடுகளும் உள்ளன. வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் மேம்படும் .இரண்டாம் பட்சமாக மேற்கு பார்த்து அமைக்கலாம் ஆனால் தெற்கு பார்த்து நுழைவாயில் கதவு அமைப்பது சிறப்பு இல்லை என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது . ஆனால் தெற்கு திசை வீடும் வாஸ்து முறைப்படி அமைத்து விட்டால் அனைத்து நற்பலன்களும் கிட்டும் . இப்புத்தகத்தில் தெற்கு பார்த்த மனையின் வரை படங்களும் பல்வேறு நில அளவில் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள் நன்றி வாழ்க வளமுடன்.